எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வாஷிங்டன் : அமெரிக்க நீதிபதிகளை விமர்சனம் செய்வோருக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தாராளமாக நிதியுதவி வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டார். அப்போது ட்ரம்ப் உடனான ரகசிய தொடர்பு குறித்து ஆபாச நடிகை ஸ்டார்மி ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இந்த விவகாரத்தை மூடி மறைக்க ட்ரம்ப் தனது வழக்கறிஞர் மூலம் நடிகை ஸ்டார்மிக்கு ரூ.1 கோடியை வழங்கினார்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் நடுவர் நீதிமன்றம் கடந்த ஜனவரியில் தீர்ப்பு வழங்கியது. அப்போது ட்ரம்ப் குற்றவாளி தான். எனினும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அவருக்கு அபராதமோ, தண்டனையோ விதிக்க விரும்பவில்லை" என்று தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜுன் மெர்சனுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதோடு, அதிபர் ட்ரம்ப் எடுக்கும் முடிவுகளை தடுக்கும் வகையில் உத்தரவுகளை பிறப்பிக்கும் நீதிபதிகளுக்கு எதிராகவும் சமூக வலைதளங்கள் வாயிலாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நீதிபதிகளின் வீடுகளுக்கு மர்ம பார்சல்களும் அனுப்பப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட நீதிபதிகளுக்கு எதிராக கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் அதிபர் ட்ரம்புக்கு எதிரான நீதிபதிகளை விமர்சிக்கும் நபர்கள், குழுக்களுக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தாராளமாக நிதியுதவி வழங்கி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை அவர் ரூ.5.41 லட்சத்தை வழங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. நீதிபதிகளுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்கும் நபர்களுக்கு தலா ரூ.8,600-ஐ எலான் மஸ்க் வழங்கி வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |