முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தோல்விக்கு நானே பொறுப்பு: ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக்

ஞாயிற்றுக்கிழமை, 20 ஏப்ரல் 2025      விளையாட்டு
Ryan-Barak-2025-04-20

ஜெய்ப்பூர்,  தோல்விக்கான பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன் என்று ராஜஸ்தான் பொறுப்பு கேப்டன் ரியான் பராக் தெரிவித்துள்ளார்.

லக்னோ வெற்றி...

ஐ.பி.எல். தொடரின் 36-வது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய லக்னோ அணி 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ராஜஸ்தான் 178 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 2 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி திரில் வெற்றி பெற்றது.

19-வது ஓவர் வரை... 

இந்நிலையில், தோல்விக்குப் பிறகு ரியான் பராக் கூறியதாவது: எனக்கு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவே கடினமாக உள்ளது. 18 முதல் 19-வது ஓவர் வரை ஆட்டம் எங்களிடம் தான் இருந்தது. இந்த தோல்விக்கான பணியை நானே ஏற்றுக் கொள்கிறேன். நான் நின்று போட்டியை முடித்துக் கொடுத்திருக்க வேண்டும். எங்களின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகவே வீசினர்.

சாதகமாக இல்லை...

பவுலிங்கிலும் கடைசி ஓவர் மட்டும்தான் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. சந்தீப் சர்மாவை நம்பினோம். ஆனால், அவருக்கு இன்றைய நாள் சிறப்பாக அமையவில்லை. 165-170 ரன்களுக்குள் அவர்களை கட்டுப்படுத்தி விடுவோம் என நினைத்தோம். கடைசி ஓவர் நாங்கள் நினைத்தபடி செல்லவில்லை என்பதால் அது நடக்கவில்லை. ஐ.பி.எல். தொடரில் சில தவறான பந்துகளை வீசினால் அது ஒட்டுமொத்த போட்டியையுமே பாதிக்கும் என்பதற்கு இது உதாரணம் என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து