முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஹல்காம் தாக்குதலில் இறந்த ஆந்திரத்தை சேர்ந்த இருவருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2025      இந்தியா
Chandrababu-Naidu 2023-09-2

Source: provided

விசாகப்பட்டினம்: ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை ஆந்திரம் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளிகளில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் தாக்குதலில் குறைந்தது 26 போ் கொல்லப்பட்டனா். இதில் பெரும்பாானோா் சுற்றுலாப் பயணிகள் ஆவா். தாக்குதலில் ஆந்திரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஜே.எஸ். சந்திரமௌலி மற்றும் கவாலியைச் சேர்ந்த ஐ.டி. நிபுணர் மதுசூதன் ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஜே.எஸ். சந்திரமௌலி உடல் புதன்கிழமை இரவு விசாகப்பட்டினம் விமான நிலையம் வந்தடைந்தது.

விமான நிலையம் வந்த சந்திரமௌலியின் உடலுக்கு முதல்வர் நாயுடு மலர் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மத்திய அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு, மாநில உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா மற்றும் விசாகப்பட்டினம் எம்.பி. ஸ்ரீபரத் ஆகியோருடன், முதல்வர் இறுதிச் சடங்கு வாகனத்துடன் சிறிது தூரம் நடந்து சென்றார்.

பின்னர் செய்தியாளர்களுடனான சந்திப்பில் சந்திரபாபு நாயுடு பேசுகையில், சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் இந்தத் தாக்குதல் ஒரு திட்டமிடப்பட்ட பயங்கரவாதச் செயல். இது தனிநபர்கள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, இந்தியாவின் ஒருமைப்பாடு மற்றும் அமைதியின் மீதான தாக்குதல் என்று நாயுடு கூறினார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட சந்திரமௌலியின் குடும்பத்தினருக்கு முதல்வர் நாயுடு ஆறுதல் கூறினார்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட சந்திரமௌலியின் குடும்பத்தினருக்கு முதல்வர் நாயுடு ஆறுதல் கூறினார். மேலும், இது ஒற்றுமைக்கான நேரம். நாட்டைப் பாதுகாப்பதில் மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளை ஆதரிக்குமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தவர், நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றார்.

நீண்ட கடற்கரையைக் கொண்ட மாநிலமான ஆந்திரம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலுப்படுத்தப்படும் என்றும் நாயுடு உறுதியளித்தார். "2047-க்குள் இந்தியா உலகளவில் வளர்ந்த நாடாக இருக்கும். இதுபோன்ற தாக்குதல்கள் நமது முன்னேற்றத்தைத் தடம் புரளச் செய்யும் சக்திகளின் அவநம்பிக்கையான முயற்சிகள்" என்றும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் முறியடிக்க ஒட்டுமொத்த தேசமும் துக்கத்திலும் உறுதியிலும் ஒன்றுபட்டுள்ளது என்று முதல்வர் நாயுடு கூறினார்.

பஹல்காமில் கொல்லப்பட்ட ஆந்திரத்தை சேர்ந்த சந்திரமௌலி மற்றும் கவாலியைச் சேர்ந்த ஐ.டி. நிபுணர் மதுசூதன் ஆகிய இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி அளிக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து