Idhayam Matrimony

வான்வெளியை பயன்படுத்தத் தடை: பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய இழப்பு

திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2025      உலகம்
Pak 2023-10-18

Source: provided

லாகூர் : பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுவதாகக் கருதி தங்களது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்த பாகிஸ்தான் கோடிக்கணக்கில் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது. எதிரிக்கு தண்டனை அளிப்பதாக நினைத்துக்கொண்டு, ஏற்கனவே சீரழிந்துகொண்டிருக்கும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை அதளபாதாளத்துக்குக் கொண்டுசென்றுவிட்டது என்கின்றன தரவுகள்.

பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்ததால், இந்திய விமானத் துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதுதான். ஆனால் அதனை சமாளிக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது. ஆனால், தனது வான்வெளியைக் கடக்கும் விமானங்கள் மூலம் ஒரு நாளைக்கு பல லட்சம் வருமானம் ஈட்டி வந்த பாகிஸ்தான் இதுவரை பல கோடி இழப்பை சந்தித்துள்ளது. ஒரே நாளில், பாகிஸ்தான் விமானத் துறைக்கு வந்து குவிந்த வருமானம் நின்றுபோயிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வகையில் பாகிஸ்தான் பெற்று வந்த வருவாய் என்பது பல கோடிகள். இது பற்றி சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துகளில் வரலாற்றிலேயே இவ்வாறு கூட்டு நடவடிக்கையின் மூலம் செய்யப்பட்ட ஒரு முட்டாள்தனத்தைப் பார்த்ததில்லை என்று பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள்.

வெளிநாடுகளின் விமானங்கள் வந்தாலும், இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்கள்தான் பாகிஸ்தானை அதிகம் கடந்துசெல்லும் என்பதால், மிகப்பெரிய இழப்பாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. வெறுமனே வான்வெளியைப் பயன்படுத்துவது மட்டுமல்ல, பாகிஸ்தான் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டணங்களைக் கூட்டினால் நாள் ஒன்றுக்கு பாகிஸ்தான் சந்திப்பும் இழப்பு கிட்டத்தட்ட 3 லட்சம் டாலர்கள் என்கிறது தரவு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து