முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு: ராகுல் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 15 மே 2025      இந்தியா
Rahul 2024-06-28

Source: provided

பாட்னா: தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் 50% இடஒதுக்கீடு உச்சவரம்பு எனும் சுவரை உடைக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

பிஹாரின் தர்பங்காவில் உள்ள அம்பேத்கர் மாணவர் விடுதியில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் காந்தி,  ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க. கூட்டணி அரசு, நான் இங்கு வருவதையும் உங்கள் முன் பேசுவதையும் தடுக்க முனைந்தது. உங்களைப் போன்ற மாணவர்களின் ஆதரவு எனக்கு இருப்பதால் என்னை தடுத்து நிறுத்துவதில் அவர்கள் தோல்வியடைந்தனர்.  

இந்த சர்வாதிகார அரசாங்கம் எவ்வளவு முயற்சி செய்தாலும், நமது குரலை அடக்க முடியாது.  கல்விக்காக அரசாங்கம் பணத்தை செலவிட வேண்டும். 50% இடஒதுக்கீடு என்ற உச்ச வரம்பை உடைக்க வேண்டும். தனியார் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு இருக்க வேண்டும். நாட்டில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 24 மணி நேரமும் அநீதியை எதிர்கொள்கின்றனர். பாகுபாடு காட்டப்பட்டு கல்வி முறையிலிருந்து அவர்கள் தடுக்கப்படுகிறார்கள்.

எனவேதான், சாதிவாரி கணக்கெடுப்பு முறையான முறையில் நடத்தப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்துகிறது. மேலும், தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும்.

பொதுமக்களின் அழுத்தம் மற்றும் பயம் காரணமாக, சாதி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உண்மை யில் அவர் சாதிவாரி கணக்கெடுப்பையும், அரசியலமைப்பையும் எதிர்க்கிறார். இந்த அரசாங்கம் உங்களைப் பற்றி அல்ல, அதானி மற்றும் அம்பானியைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறது” என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து