முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க.வில் நெருக்கடி சூழல்: மூத்த தலைவர் ஜி.கே.மணி பேட்டி

சனிக்கிழமை, 17 மே 2025      தமிழகம்
Ramdos 2024-12-29

Source: provided

சென்னை : பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜி.கே. மணி  தெரிவித்துள்ளார்.

பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் 16-ந்தேதி நடைபெறும் என்றும், அதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்து இருந்தார்.

அதன்படி தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு டாக்டர் ராமதாஸ் தலைமையில் கூட்டம் தொடங்கியது. இதில் டாக்டர் ராமதாசின் மூத்த மகள் காந்திமதி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், சேலம் அருள் எம்.எல்.ஏ., பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கட்சியில் 91 மாவட்ட செயலாளர்கள், 91 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். ஆனால் கூட்டத்தில் 9 மாவட்ட செயலாளர்கள், 11 மாவட்ட தலைவர்கள் மட்டுமே டாக்டர் ராமதாசின் அழைப்பை ஏற்று ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். 82 மாவட்ட செயலாளர்கள், 80 மாவட்ட தலைவர்கள் என மொத்தம் 162 பேர் டாக்டர் ராமதாசின் அழைப்பை ஏற்காமல் கூட்டத்தை புறக்கணித்தனர். பா.ம.க. தலைவரான டாக்டர் அன்புமணி ராமதாசும் பங்கேற்கவில்லை. இது கட்சியின் மூத்த நிர்வாகிகளிடையே அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

இந்தநிலையில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காமல் 2வது நாளாக அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் புறக்கணித்துள்ளார். மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைப் புறக்கணித்த நிலையில், இளைஞரணி கூட்டத்திலும் அன்புமணி பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து அக்கட்சியின் கவுரவத்தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது. கட்சிக்குள் சலசலப்பு வருவது இயல்பு தான். இது விரைவில் சரியாகும். ஊடகங்கள் இதை பெரிதுபடுத்த வேண்டாம். ராமதாஸ், அன்புமணி இடையேயான பிரச்சினையை தீர்க்க இரவு பகலாக முயற்சிக்கிறேன். ராமதாஸ் - அன்புமணி இருவரும் விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு உள்ளது. ராமதாஸ் - அன்புமணி இடையே கூட்டணி தொடர்பாக எந்த மோதலும் இல்லை. பா.ம.க.வில் விரைவில் சுமூக தீர்வு ஏற்பட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து