முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குன்னூரில் பழக் கண்காட்சி தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      தமிழகம்
Coonoor-Fruit-show-2025-05-

குன்னூர், குன்னூரில் 65-வது பழ கண்காட்சி தொடங்கியுள்ளது.

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 65-வது பழக் கண்காட்சியானது நேற்று (மே 23) முதல்‌ மே 26 வரை நான்கு நாட்கள்‌ நடைபெற உள்ளதால்‌ சுற்றுலாப்பயணிகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ அனைவரும்‌ வருகை புரிந்து இக்காட்சியினை கண்டு ரசிக்குமாறு மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ தோட்டக்கலைத்துறையின்‌ வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இந்தியாவின்‌ தலைசிறந்த சுற்றுலா தலமாக விளங்கும்‌ நீலகிரி மாவட்டத்தில்‌ சுற்றுலா பயணிகளை கவரவும்‌, அவர்களை உற்சாகப்படுத்தவும்‌ வருடம்‌ தோறும்‌ தோட்டக்கலைத்‌ துறை மற்றும்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ மூலம்‌ பல்வேறு காட்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 65-வது பழக் கண்காட்சி நேற்று குன்னூர்‌ சிம்பூங்காவில்‌ மாவட்ட ஆட்சியர்‌ லட்சுமி பவ்யா தலைமையில்‌ அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் முன்னிலையில்‌ தொடங்கி வைக்கப்பட்டது. 

இவ்வாண்டு பழக் கண்காட்சியின்‌ சிறப்பம்சமாக எலுமிச்சை பழங்களைக்‌ கொண்டு பிரம்மாண்ட எலுமிச்சை வடிவமைப்பு, பழரசக்கோப்பை, கடற்கரை குடை, கார்‌, பழ கேக்‌, பழ ஐஸ்கிரீம்‌, தொப்பி, விசில்‌ கண்ணாடி, நீர்‌ சறுக்கு மட்டை, பழ கூடைப்பந்து மற்றும்‌ இளநீர்‌ போன்ற வடிவமைப்புகள்‌ 3.8 டன்‌ எடையுள்ள பல்வேறு பழங்களைக்‌ கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள பிற மாவட்டங்களின்‌ பழ வகைகளை பறைசாற்றும்‌ விதமாக பல்வேறு காட்சி திடல்கள்‌ அமைக்கப்பட்டுள்ளது. இதில்‌ கரூர்‌, வேலூர்‌, திருப்பத்தூர்‌, கடலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, தென்காசி மற்றும்‌ கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களை சார்ந்த தோட்டக்கலை துறையினரால்‌ பல்வேறு பழங்களை கொண்டு விதவிதமான உருவங்கள்‌ காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்‌ இவ்வருடம்‌ சுற்றுலா பயணிகள்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ கண்டுகளிக்கும்‌ வகையில்‌ பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள்‌ தோட்டக்கலைத்துறையின்‌ மூலம்‌ நடத்தப்படவுள்ளது. 65வது பழக் கண்காட்சியானது நேற்று(மே 23) முதல்‌ மே 26 வரை நான்கு நாட்கள்‌ நடைபெற உள்ளதால்‌ சுற்றுலாப்பயணிகள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ அனைவரும்‌ வருகை புரிந்து இக்காட்சியினை கண்டு ரசிக்குமாறு மாவட்ட நிர்வாகம்‌ மற்றும்‌ தோட்டக்கலைத்துறையின்‌ வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 6 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 7 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 8 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 9 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து