எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, பாகிஸ்தானுககு 1 பில்லியன் டாலர் வழங்கியது தொடர்பாக நாணய நிதிக்கு விளக்கம் கேட்டுள்ளது.
இந்தியாவின் ஆட்சேபனைகளையும் மீறி, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டாலர் வழங்கியதை சர்வதேச நாணய நிதியம் நியாயப்படுத்தியுள்ளது. இந்த கடன் தவணையைப் பெறுவதற்கு தேவையான அனைத்து இலக்குகளையும் பாகிஸ்தான் அடைந்துள்ளது என ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஐ.எம்.எப்.-ன் தகவல் தொடர்புத் துறை இயக்குநர் ஜூலி கோசாக், "பாகிஸ்தான் உண்மையில் அனைத்து இலக்குகளையும் அடைந்துவிட்டதாக எங்கள் வாரியம் கண்டறிந்துள்ளது. அது சில சீர்திருத்தங்களில் முன்னேற்றம் கண்டுள்ளது, அதனால்தான், வாரியம் முன்னோக்கிச் சென்று நிதி வழங்கும் திட்டத்தை அங்கீகரித்தது.
இதற்கான முதல் மதிப்பாய்வு 2025-ம் ஆண்டின் முதல் காலாண்டில் திட்டமிடப்பட்டது. மேலும் அந்தக் காலக்கெடுவுக்கு இணங்க, மார்ச் 25, 2025 அன்று, ஐ.எம்.எப். ஊழியர்களும், பாகிஸ்தான் அதிகாரிகளும் விரிவாக்கப்பட்ட நிதி வசதிக்கான முதல் மதிப்பாய்வு குறித்து ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தத்தை எட்டினர். அது அந்த ஊழியர்கள் அளவிலான ஒப்பந்தம், பின்னர் எங்கள் நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது மே 9 அன்று மதிப்பாய்வை நிறைவு செய்தது. இதன் காரணமாக அந்த நேரத்தில் பாகிஸ்தான் நிதியை பெற்றது" என்று அவர் மேலும் கூறினார். சர்வதேச நாணய நிதியத்தால் செப்டம்பர் 2024 இல் அங்கீகரிக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ், பாகிஸ்தான் சுமார் 2.1 பில்லியன் டாலர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


