முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்: சிங்கப்பூர் அமைச்சர் அறிவுரை

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      உலகம்
Singapore 2024-12-04

சிங்கப்பூர், தமிழ் மொழியை மாணவர்கள் அடுத்த 50 ஆண்டுகளுக்கு துடிப்புடன் வைத்திருக்க வேண்டும் என சிங்கப்பூர் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி சங்கத்தின் 50-வது ஆண்டு நிறைவு விழாவில், மாணவர்களிடம் கே.சண்முகம் பேசியதாவது;- "அடுத்த 50 ஆண்டுகளுக்கு தமிழைத் துடிப்பாக வைத்திருக்க, உங்களைப் போன்ற இளைய தலைமுறையினர் எங்களுக்கு தேவை. அடுத்த 20 அல்லது 30 ஆண்டுகளுக்குப் பிறகு, மேடையில் சரளமாக தமிழ் பேசக்கூடிய அமைச்சர்கள் நம்மிடம் இருப்பார்களா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

தமிழை பேசாதவர்கள், இனி வரும் காலங்களில் தமிழை மரியாதைக்குரிய மொழியாக கருதுவார்களா? என்றும் நாம் நம்மை கேட்டுக்கொள்ள வேண்டும். பிற மொழிகளை பேசுபவர்களுக்கு தமிழ் மொழி எளிதில் அணுகக்கூடிய ஒன்றாகவும், ஈடுபாட்டுடன் பேசக்கூடிய மொழியாகவும் இருக்க வேண்டும். வகுப்பறைகள் மற்றும் சமூக மையங்களுக்கு வெளியே உள்ள இடங்களிலும் தமிழ் மொழி இடம்பெற வேண்டும். பல இளைஞர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் பேசுகிறார்கள். இது தமிழ் மொழியை மட்டுமல்ல, மாண்டரின் மற்றும் மலாய் போன்ற பிற மொழிகளையும் பாதிக்கும்."

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 59 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து