முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

வெள்ளிக்கிழமை, 23 மே 2025      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, கல்லூரி மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் கோரியுள்ளது.

தமிழக அரசின் 2025-26-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, சட்டசபையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தாக்கல் செய்தார். இதில் அரசு ஊழியர்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினருக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

அப்போது அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் கைக்கணினி (டேப்லட்) அல்லது மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும் என்றும் இதற்காக முதற்கட்டமாக ரூ. 2,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார். ரூ. 20,000 என்ற அளவில் மடிக்கணினி தரமாக வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்க 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் கோரியுள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. சேமிப்புத் திறன், 14 அல்லது 15.6 திரை, புளுடூத், 720பி எச்.டி. கேமரா உள்ளிட்ட அம்சங்களைக் மடிக்கணினி கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 59 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து