எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம், 2026 தேர்தல் வரை நானே பா.ம.க. தலைவராக நீடிப்பேன் என்று ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையிலான மோதல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து நடத்திய சமரச பேச்சுவார்த்தை டிராவில் முடிந்தது. சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட இருவர் யார் என்பது உங்களுக்கு தெரியும். தலைவர் பதவியை நான் விட்டுக் கொடுக்க தயாராக இருந்த போதும் அன்புமணி நம்பவில்லை. அய்யாவை நம்ப முடியாது. எழுதி கொடுக்க சொல்லுங்கள் என்றார். என்னை தேடி வந்த 14 பஞ்சாயத்துக்காரர்களும் ஒரே விதமான தீர்ப்பையே சொன்னார்கள். எல்லாம் தனக்கே வேண்டும் என்று அன்புமணி சொல்கிறார்.
மாவட்ட செயலாளர்கள் வருகையை தடுத்து நிறுத்தி, அவரே (அன்புமணி) செல்போனில் பேசி, என்னை மானபங்கம் செய்துள்ளார். அன்று அமைதி காத்திருந்தால், அதிகாரம் தானாக அன்புமணிக்கு வந்து இருக்கும். ஓரிரு ஆண்டுகளில் முடிசூட்டுவிழா நானே முன்னின்று நடத்தியிருப்பேன்
என்னுடைய பாட்டாளி சொந்தங்களை, என் உயிருக்கும் மேலாக, தெய்வங்களாக நினைக்கிறேன். அவர்கள் என்னை குல தெய்வம் என்று நினைக்கிறார்கள், சொல்கிறார்கள். எல்லாம் எனக்கே வேண்டும் என்றார் அன்புமணி. என்னை கொள்ளுப் பேரன், பேத்திகளுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டு இருங்கள் என்றார். என் உயிருள்ளவரை அவ்வாறு இருக்க முடியாது என்று கூறினேன். என்னுள் இருக்கும் இயற்கையான கோபம் கொஞ்சம் பொங்கி எழுந்து 'நீயா, நானா பார்த்து விடுவோம் ?' என்ற முடிவுக்கு கொண்டு வந்தது.
என்னுடைய நெஞ்சில் குத்துகிறார்கள்.. என்னை நடைப்பிணம் ஆக்கி விட்டு நடைபயணம் செய்கிறார்கள். என் கைவிரல்களை கொண்டே, என் கண்ணை குத்திக்கொண்டேன். உயிருள்ள என்னை உதாசினம் செய்துவிட்டு, என் படத்தை வைத்து உற்சவம் செய்கிறார்கள். கூட்டணி குறித்து நான் தான் முடிவு செய்வேன். 2026 தேர்தல் வரை நானே பா.ம.க. தலைவராக நீடிப்பேன். பிறகு வேண்டுமானால் அவர் (அன்புமணி) இருக்கட்டும். இதுதான் என் முடிவு
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


