முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சப்-கலெக்டர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-1, குரூப்-1ஏ முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது

சனிக்கிழமை, 14 ஜூன் 2025      தமிழகம்
TNPSC 2023-04-20

சென்னை, சப்-கலெக்டர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1, 1ஏ முதல்நிலை தேர்வு இன்று 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என மொத்தம் 44 இடங்களில் நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் சப்-கலெக்டர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்பட குரூப்-1 பணியிடங்களில் 70 காலியிடங்கள் உள்ளன.

காலியாக உள்ள 28 துணை ஆட்சியா்கள், 7 காவல் துணை கண்காணிப்பாளா்கள், 19 வணிகவரி உதவி ஆணையா், 7 ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை உதவி இயக்குநா், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், 6 தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் என 70 காலிப் பணியிடங்களுக்கும், குரூப் 1 ஏ பிரிவில் 2 உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் பணியிடங்களுக்கும் முதல் நிலை தோ்வு இன்று நடைபெறுகிறது.

இந்த பதவிகளுக்கு 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேர், குரூப்-1 ஏ பதவிக்கு 6 ஆயிரத்து 465 பேர், குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ பதவிக்கு 14 ஆயிரத்து 849 பேர் என மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில், குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித் தேர்வு இன்று (ஞாயிற்றுகிழமை) நடைபெறுகிறது.

தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலுகாக்கள் என மொத்தம் 44 இடங்களில் குரூப் 1, 1ஏ முதல்நிலை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 987 பேர் ஈடுபடுகிறார்கள். சென்னையில் 170 மையங்களில் தேர்வானது நடைபெறுகிறது.

இதற்கிடையே டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு காரணமாக இன்று (ஜூன் 15ம் தேதி) நடைபெறவிருந்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மாற்றுத் தேதிகள் www.ideunom.ac.in இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் என்று அறிக்கையின் வாயிலாக சென்னைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து