முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கிய ஹவுதி படை

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூன் 2025      உலகம்
Houthi 2025-06-15

Source: provided

தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர். முதல் முறையாக ஒருங்கிணைந்து இஸ்ரேலை தாக்குவதாக ஹவுதி படையினர் வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம், எரிசக்தி உற்பத்தி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டது. பதிலுக்கு ஈரான் தரப்பு மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 3 பேர் உயிரிழந்தனர். இதை இஸ்ரேல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இருதரப்புக்கு இடையே மோதல் தொடர்கின்ற காரணத்தால் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரான் மற்றும் அமேரிக்கா இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. இஸ்ரேல் - ஈரான் மோதல் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வியும் இப்போது எழுந்துள்ளது. உலகத் தலைவர்கள் இந்த மோதல் கூடாது என வலியுறுத்தி உள்ளனர்.

ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர். முதல் முறையாக ஒருங்கிணைந்து இஸ்ரேலை தாக்குவதாக ஹவுதி படையினர் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையிலும், ஒடுக்கப்பட்ட பாலஸ்தீன மற்றும் ஈரான் மக்களின் தரப்பில் இருந்து ஈரான் ராணுவ நடவடிக்கைக்கு உறுதுணையாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டோம் என ஹவுதி செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை ஹவுதி படையினர் மேற்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து