முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிருஷ்ணகிரியில் 'மா' விவசாயிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம்

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2025      தமிழகம்
Krishnagiri-admk-2025-06-20

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் மா விவசாயிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சத்து 50,000 ஹெக்டேர் பரப்பளவில் மாம்பழம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு மாம்பழம் கொள்முதலுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என மா விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து அ.தி.மு.க. சார்பில் மா விவசாயிகளுக்கு ஆதரவாகவும்,  தி.மு.க. அரசை கண்டித்தும் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

அதன்படி நேற்று காலை சரியாக 9 மணிக்கு அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், தமிழ்செல்வம் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் மா கொள்முதல் விலை கிலோவுக்கு 13ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், மாங்கூழுக்கான ஜி.எஸ்.டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து