முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபான்மையினருக்கு மட்டும் கடன் வழங்கப்படுகிறதா..? - தமிழ்நாடு அரசு விளக்கம்

வெள்ளிக்கிழமை, 20 ஜூன் 2025      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : சிறுபான்மையினருக்கு மட்டும் அரசு கடன் வழங்குவதாக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள் என தமிழக அரசு  தெரிவித்துள்ளது.

இந்துக்களுக்கு இல்லாத உரிமை சிறுபான்மை கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு என்று குறிப்பிட்டு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) தனிநபர் கடன் திட்ட அறிவிப்பு விளம்பரம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

இதற்கு விளக்கம் அளித்து, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

"தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் ரூ.30 லட்சம் வரை தனிநபர் கடன் திட்டத்தை அறிவித்து உள்ளது. இதேபோன்று பிற்படுத்தப்பட்டோருக்கு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலமாகவும், ஆதிதிராவிடர்களுக்கு, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலமாகவும் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதை மறைத்து சிறுபான்மையினருக்கு மட்டும் அரசு கடன் வழங்குவதாக பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து