Idhayam Matrimony

கருணைக் கொலைக்கு பிரிட்டன் நாடாளுமன்றம் ஒப்புதல்

சனிக்கிழமை, 21 ஜூன் 2025      உலகம்
Mark-Carney 2025-03-28

Source: provided

பிரிட்டன் : கொடூர நோயால் பாதிக்கப்பட்டவா்கள் தங்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்கு அனுமதி அளிப்பதற்கான சட்ட மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்ற கீழவையில் நடைபெற்ற இதற்கான வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 314 எம்.பி.க்களும் எதிராக 291 எம்.பி.க்களும் வாக்களித்தனா். இதற்குப் பிறகு அந்த மசோதா மேலவைக்குக் கொண்டு செல்லப்படும். அங்கு அந்த மசோதாவில் திருத்தங்கள் மேற்கொள்ளவோ, சட்டமாக்கலை தாமதப்படுத்தவோ மட்டும்தான் முடியும். கீழவை நிறைவேற்றிய மசோதாக்களை மேலவையால் நிராகரிக்க முடியாது.

இந்த மசாதா சட்டமாக்கப்பட்டால், பிரிட்டனின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட, குணப்படுத்த முடியாத கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நபா்கள் மருத்துவா்களின் உதவியுடன் தங்களது உயிரை மாய்த்துக்கொள்ள விண்ணப்பிக்க முடியும். அதற்கான மருந்தை தாங்களாகவே உட்கொள்ளும் திறன் நோயாளிகளுக்கு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து