Idhayam Matrimony

பும்ரா விளையாடாதது அதிர்ச்சி அளிக்கிறது: ரவி சாஸ்திரி விமர்சனம்

வியாழக்கிழமை, 3 ஜூலை 2025      விளையாட்டு
3-Ram-52

Source: provided

பர்மிங்ஹாம்: இந்தியாவின் முன்னாள் வீரர், பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடாதது அதிர்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளார்.

2-வது டெஸ்ட்...

பர்மிங்ஹாமில் நேற்று முன்தினம் (ஜூலை 2) தொடங்கிய 2-ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது.  முதல்நாள் முடிவில் இந்திய அணி 310/5 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியில் பும்ரா இல்லாமல் களமிறங்கியது மிகுந்த விமர்சனத்துக்குள் உள்ளாகி வருகிறது.

அதிருப்தி...

ஏற்கெனவே, முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வியுற்றதால் இந்தியாவின் முன்னாள் வீரரும் முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர்  பேசியதாவது: உலகின் சிறந்த பந்துவீச்சாளரை இப்படி செய்வதா? இந்தத் தொடரில் இந்தப் போட்டி மிக முக்கியமானது. ஏற்கெனவே, இந்திய அணி நியூசிலாந்திடம் 3-0 எனவும் ஆஸ்திரேலியாவிடம் 3-1 எனவும் தோல்வியுற்றது.

கடினமாக இருக்கிறது...

இங்கிலாந்திடம் முதல் போட்டியை தோற்ற பிறகு வெல்வதற்குதான் முயற்சிக்க வேண்டும். உலகின் சிறந்த பந்திவீச்சாளரான பும்ராவை 7 நாள்கள் ஓய்வுக்குப் பிறகும் அணியில் விளையாட வைக்காதது நம்புவதற்கே கடினமாக இருக்கிறது. இந்தப் போட்டியில் வென்று 1-1ஆன பிறகு லார்ட்ஸ் போட்டியில் வேண்டுமானால் ஓய்வு எடுத்திருக்கலாம். யார் போட்டியில் விளையாட வேண்டுமென்பது கேப்டன், பயிற்சியாளர் கையில்தான் இருக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து