முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீண்டிய ஸ்டோக்சுக்கு பதிலடி கொடுத்த ஜெய்ஸ்வால்

வியாழக்கிழமை, 3 ஜூலை 2025      விளையாட்டு
3-Ram-54

Source: provided

பர்மிங்காம்: 2வது டெஸ்ட் போட்டியின் போது தன்னை சீண்டிய ஸ்டோக்சுக்கு ஜெய்ஸ்வால் பதிலடி அளித்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெஸ்ட் தொடரில்... 

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

ஜெய்ஸ்வால் 87... 

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். சதத்தை நோக்கி முன்னேறிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆன ஜெய்ஸ்வால் (87 ரன், 107 பந்து, 13 பவுண்டரி) பென் ஸ்டோக்ஸ் ஓவரில் தேவையில்லாமல் வைடாக சென்ற பந்தை அடிக்க முற்பட்டு விக்கெட் கீப்பர் ஜாமி சுமித்திடம் சிக்கினார். இங்கிலாந்து தரப்பில் கிறிஸ்வோக்ஸ் 2 விக்கெட்டும், ஸ்டோக்ஸ், பிரைடன் கார்ஸ், பஷீர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.

விரும்ப மாட்டீர்கள்...

முன்னதாக இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஒரு ஓவரை வீசினார். அவருடைய ஒரு பந்தை எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் சிங்கிள் எடுப்பதற்காக ஓடினார். அப்போது தம்முடைய அருகே வந்த அவரிடம் பென் ஸ்டோக்ஸ் ஏதோ சொல்லி சீண்டினார். அதற்கு பதிலடி கொடுத்த ஜெய்ஸ்வால், 'நீங்கள் அந்த வார்த்தைகளை என்னிடமிருந்து கேட்க விரும்ப மாட்டீர்கள்' என்று கூறினார்.

இணையத்தில் வைரல்...

அதைக் கேட்ட ஸ்டோக்ஸ், 'எதைக் கேட்க விரும்ப மாட்டேன்?' என்று அவருக்கு பதிலளித்தார். அடுத்தப் பந்தை கருண் நாயர் எதிர்கொண்டார். அந்த பந்தை முடித்த பின்பும் ஸ்டோக்ஸ் ஏதோ சொல்ல அதற்கு "என்ன சொன்னீர்கள்" என்று ஜெய்ஸ்வால் கேட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து