Idhayam Matrimony

இந்தியாவில் ஹாக்கி விளையாட பாகிஸ்தான் அணிக்கு அனுமதி

வியாழக்கிழமை, 3 ஜூலை 2025      இந்தியா
Hockey 2023 04 17

Source: provided

புதுடில்லி: அடுத்த மாதம் இந்தியாவின் பீஹாரில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது 

இந்தியா - பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வருகிறது. இரு நாடுகளிடையேயான உறவுகளில் ஏற்பட்ட விரிசல், விளையாட்டு துறையிலும் எதிரொலித்தது. கிரிக்கெட் உட்பட எந்தவொரு விளையாட்டிலும் பல ஆண்டுகளாக இந்திய அணியினர், பாகிஸ்தான் சென்று விளையாடுவதில்லை. அதேபோல், அவர்களும் இங்கு வந்து விளையாடுவதில்லை. ஆசிய கோப்பை, உலக கோப்பை போன்ற சில தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதும் சூழல் ஏற்படுகிறது. மற்றபடி இரு நாடுகளும் தனிப்பட்ட தொடர்களில் விளையாட்டை தவிர்த்து வந்தன.

சில நேரங்களில் இந்தியா உடன் போட்டிகளில் விளையாட பாகிஸ்தானை சேர்ந்த அமைச்சர்கள், விளையாட்டு வீரர்கள் ஆர்வம் காட்டி, வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். ஆனால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றைத் தொடர்ந்து அதிகரித்த பதட்டம் காரணமாக இரு நாடுகளும் மீண்டும் பரம எதிரிகள் பிம்பத்திற்கு சென்றுள்ளன.

இந்த நிலையில், இந்தியாவில் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 7 வரை ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் பாகிஸ்தான் அணி பங்கேற்க முன்வருமா, அதற்கு இந்தியா சம்மதிக்குமா என கேள்விகள் எழுந்தன. ஆனால், இப்போது மத்திய அரசு தரப்பில் பாகிஸ்தான் அணி பங்கேற்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம், மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் பாக்., பங்கேற்க ஒப்புதல் வழங்கியுள்ளன.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தரப்பில் கூறுகையில், ''பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளில் எந்த அணி இந்தியாவில் விளையாடுவதையும் நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், இருதரப்புத் தொடர்கள் வேறு'' என்று தெரிவித்துள்ளன. இந்த ஒப்புதல் காரணமாக ஆசிய கோப்பையின் போது இந்தியாவும் பாகிஸ்தானும் ஹாக்கி களத்தில் மோதுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து