முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பிக்கையளிக்கும் கில்: ஜோனதன் டிராட் புகழாரம்

வியாழக்கிழமை, 3 ஜூலை 2025      விளையாட்டு
3 Ram 50

Source: provided

பர்மிங்ஹாம்:  இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக ஷுப்மன் கில் விளையாடுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் பாராட்டியுள்ளார்.

இந்திய அணி பேட்டிங்...

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் (ஜூலை 2) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 310 ரன்கள் எடுத்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 87 ரன்கள், கருண் நாயர் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். அவர் 114 ரன்களுடன் களத்தில் இருந்தார். 41 ரன்களுடன் ஜடேஜாவும் அவருடன் களத்தில் இருந்தார். இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்டத்தில் விளையாடியது.

உடல்மொழி...

சதம் விளாசிய நிலையில், ஷுப்மன் கில்லின் யுக்திகள் மற்றும் அவரது உடல்மொழி ஆகியவை அவர் உலகத் தரத்திலான வீரர் என்பதை காட்டுவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜோனதன் டிராட் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாளில் ஷுப்மன் கில் ரன்கள் குவித்த விதம் சிறப்பாக இருந்தது. அவரது உடல்மொழி மற்றும் களத்தில் நிலைத்து நின்று விளையாடும் விதம் அணிக்காக நான் இருக்கிறேன் எனக் கூறுவதாக இருந்தது. 

சிறந்த எதிர்காலம்... 

அவருடைய எண்ணம் மிகவும் தெளிவாக இருந்தது. அணிக்காக நான் இருக்கிறேன். ஆட்டமிழக்காமல் விளையாடுவேன். நாளை மீண்டும் எனது ரன்குவிப்பை தொடர்வேன் என்பது அவரது உடல்மொழியின் மூலம் தெரிந்தது. ஷுப்மன் கில்லுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவர் ரசிகர்களுக்கு மட்டுமின்றி, இந்திய அணி வீரர்களுக்கும் நம்பிக்கையளிக்கும் விதமாக விளையாடி வருகிறார். பிரைடான் கார்ஸ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் இருவருக்கும் எதிராக அவர் வெவ்வேறு யுக்திகளை பயன்படுத்தி ரன்கள் குவிக்கிறார். இந்த இரண்டு பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து