Idhayam Matrimony

3-வது வரிசையில் நிலையான வீரர் இல்லாமல் திணறும் இந்திய அணி

வியாழக்கிழமை, 3 ஜூலை 2025      விளையாட்டு
INDIA 2024-06-21

Source: provided

பர்மிங்ஹாம்: புஜாராவுக்கு பிறகு 3-வது வரிசையில் நிலையான வீரர் இல்லாமல் இந்திய அணி திணறி வருகிறது.

மோசமான தோல்வி...

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் ஜூலை 9, 2024 அன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் நியமிக்கப்பட்டார். கம்பீரின் தலைமையில் இந்திய அணி, டெஸ்ட் தொடரில் பல மோசமான சம்பவங்களை நிகழ்த்தியுள்ளது. அவரது பயிற்சியாளர் பதவியில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (0-3) தோல்வியடைந்தது. இது இந்தியாவின் முதல் முறையாக உள்நாட்டில் டெஸ்ட் தொடர் தோல்வியாகும். அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கிலும் இந்திய அணி தோல்வியடைந்தது.

நிலையான வீரர்...

இந்நிலையில் கம்பீர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதில் இருந்து இந்திய டெஸ்ட் அணியின் 3-வது வரிசையில் நிலையான வீரரை விளையாட வைக்கவில்லை. அதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் 3-வது வரிசையில் பட்டிக்கல் களமிறங்கினார். 2-வது டெஸ்டில் சுப்மன் கில், 3-வது டெஸ்டில் கில் ஆடவில்லை. அதனை தொடர்ந்து கேஎல் ராகுல், மீண்டும் கில் 3-வது வரிசையில் இறங்கினார்.

சாய சுதர்சன்.... 

அதனை தொடர்ந்து இங்கிலாந்து எதிரான தொடரில் 3-வது வரிசையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாய சுதர்சன் களமிறங்கினார். முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாத நிலையில் 2-வது டெஸ்ட்டில் கருண் நாயர் அந்த வரிசையில் களமிறங்கினார். இப்படி கடந்த 7 டெஸ்ட் போட்டியில் ஒரு நிலையான வீரரை 3-வது வரிசையில் களமிறக்கியதில்லை. அவரது முதல் ஆறு மாதங்களில், இந்திய அணி 26 சர்வதேச போட்டிகளில் விளையாடி, 14 வெற்றிகள், 10 தோல்விகள், ஒரு டிரா மற்றும் ஒரு டை பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து