முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

27 நாடுகளின் உயரிய விருதுகள்: பிரதமருக்கு பவன் கல்யாண் வாழ்த்து

வியாழக்கிழமை, 10 ஜூலை 2025      இந்தியா
Modi-1 2025-07-09

புதுடெல்லி, பிரேசில், கானா, நமீபியா உட்பட 27 நாடுகளின் உயரிய விருதுகளைப் பெற்றிருப்பதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்திருக்கிறார் என்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பவன் கல்யாண் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகள் சுற்றுப் பயணத்தின்போது பிரேசில், கானா, நமீபியா ஆகிய நாடுகளின் மிக உயர்ந்த சிவில் விருதுகளைப் பெற்றுள்ளார். இதன் மூலம், இதுவரை 27 உலக நாடுகளின் மிக உயரிய சிவில் விருதுகளைப் பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, உலகின் பெரிய மற்றும் சிறிய நாடுகளுடன் வலுவான ராஜதந்திர உறவுகளை வளர்த்து வருவதன் மூலம், இந்தியாவின் உலகளாவிய நிலையை மாற்றியுள்ளார். பிரமதர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமை உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக இந்தியாவை மாற்றி உள்ளது. அதோடு, ஆபரேஷன் சிந்தூர் போன்ற முக்கிய தருணங்களில் சர்வதேச சமூகத்தின் ஆதரவையும் மரியாதையையும் நாடு பெற்றது.

தனது அரிய சாதனைகள் மூலம் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கிறார். மிக உயர்ந்த தலைமைப் பண்பு மற்றும் ராஜதந்திர திறன்கள் மூமல் ஒரு முன்மாதிரியான அரசியல் தலைவராக பிரதமர் மோடி திகழ்கிறார்.” என பாராட்டு தெரிவித்துள்ளார்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து