Idhayam Matrimony

சர்ச்சை கேள்விகள் தவிர்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்

சனிக்கிழமை, 12 ஜூலை 2025      தமிழகம்
TNPSC 2024 08 13

Source: provided

சென்னை : குரூப்-4 தேர்வு வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு  இருந்ததாக டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்தார். 

தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்வினை 14 லட்சம் பேர் எழுதினார்கள். 4,922 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பில் நடந்தது. சென்னையில் 316 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் 314 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. சென்னையில் (சனிக்கிழமை) 94,845 பேர் தேர்வு எழுதினார்கள்.

 எழும்பூர் அரசு மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தேர்வினை டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- குரூப்-4 தேர்வில் கேள்விகள் யாரும் பதிலளிக்க முடியாத மாறுபட்ட அளவில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. வினாத்தாளில் அரசியல் மற்றும் சாதி, சமயம் சார்ந்த கேள்விகள் சில நேரங்கள் கேட்கப்படுவதால் தர்மசங்கடமான சூழ்நிலை உருவாகிறது. கேள்விகளை தயாரிக்கும் குழுவில் உள்ளவர்கள் அதுபோன்ற கேள்விகளை கேட்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து இதுபோன்ற கேள்விகளை அவர்கள் எடுத்து வந்தால் அந்தக் குழுவில் இருந்து நீக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து