முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கில்லை சமாதானப்படுத்திய டக்கெட்

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      விளையாட்டு
ghill

Source: provided

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.  இதையடுத்து 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 3 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது.

இதனிடையே நேற்று முன்தினம் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இங்கிலாந்து வீரர் கிராலி தேவையில்லாமல் நேரத்தை விரயம் செய்ததாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட இந்திய கேப்டன் சுப்மன் கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பும்ரா பந்துவீச்சில் தனது கையில் அடிபட்டதாக கூறி கிராலி பிசியோவை கூப்பிட்டார். போட்டியின் கடைசி நிமிடங்களில் வேண்டுமென்றே நேரத்தை வீணடித்து 3 ஆம் நாளில் பேட்டிங் செய்யாமல் தவிர்க்க கிராலி வேண்டுமென்றே பிசியோவை கூப்பிடுவதாக சுப்மன் கில் கோபமடைந்தார். ரிட்டையர்ட் அவுட் முறையில் கிராலி வெளியேறுவதாக கில் சைகை செய்து கிண்டல் செய்தார். இதனால் கிராலி - கில் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக தலையிட்ட பென் டக்கெட் இருவரையும் சமாதானம் செய்ய முயன்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. 

அன்பளிப்பு வழங்கிய ராகுல்

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் சதமும் (104 ரன்), ஜேமி சுமித் (51 ரன்), பிரைடன் கார்ஸ் (56 ரன்) அரைசதமும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியும் 387 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 100 ரன்கள் அடித்தார்.  இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சதமடிப்பது கவுரமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாக இந்த போட்டியில் சதமடித்து அசத்திய கே.எல்.ராகுல் தான் அணிந்திருந்த ஜெர்சியில் கையெழுத்திட்டு லார்ட்சில் உள்ள அருங்காட்சியத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். 

ஆக்ரோஷமாக கொண்டாடிய சிராஜ் 

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் சதமும் (104 ரன்), ஜேமி சுமித் (51 ரன்), பிரைடன் கார்ஸ் (56 ரன்) அரைசதமும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியும் 387 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 100 ரன்கள் அடித்தார்.  

இதைத்தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி நேற்று முன்தினம் ஆட்ட நேரம் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் அடித்திருந்தது.  இத்தகைய சூழலில் 4-வது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த டக்கெட் - கிராவ்லி ஜோடி 6-வது ஓவரில் பிரிந்தது. பென் டக்கெட் 12 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் பும்ராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். விக்கெட் கைப்பற்றியதை சிராஜ் ஆக்ரோஷமாக கத்தி கொண்டாடினார். விக்கெட் வீழ்த்தியவுடன் ஓடிய சிராஜ், டக்கெட்டின் முகத்திற்கு நேராக கத்தி வெறித்தனமாக கொண்டாடினார். டக்கெட் அதிருப்தியுடன் வெளியேறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.  

டெஸ்ட் விளையாட ரகானே விருப்பம்

 இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் ஆன ரகானே கடைசியாக கடந்த 2023-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. தற்போது உள்ளூர் தொடர்களில் சிறப்பாக விளையாடி வரும் அவர், மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப போராடி வருகிறார். இவரது தலைமையில் 2020/21 பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரில் இந்தியா 2 - 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய மண்ணில் கோப்பையை வென்றது.

இந்நிலையில் தனக்கு மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் உள்ளதாக ரகானே தெரிவித்துள்ளார். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் கூறுகையில், "நான் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உள்ளது. ஒரு வீரராக என்னால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்கள் உள்ளன. வெளிப்படையாகச் சொன்னால், என்னை அணியில் சேர்க்க வேண்டி தேர்வாளர்களுடன் உரையாட முயற்சித்தேன். ஆனால் எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஒரு வீரராக என்னால் செய்ய முடிந்த விஷயம் விளையாட வாய்ப்பு கிடைக்கும்போது சிறப்பான ஆட்டத்தை கொடுப்பது மட்டுமே" என்று கூறினார். 

சச்சினை சமன் செய்த கே.எல்.ராகுல்

இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதலில் ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் சதமும் (104 ரன்), ஜேமி சுமித் (51 ரன்), பிரைடன் கார்ஸ் (56 ரன்) அரைசதமும் அடித்தனர். இந்தியா தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியும் 387 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 100 ரன்கள் அடித்தார்.  

இதனையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து மண்ணில் கே.எல்.ராகுல் இதுவரை 4 சதங்கள் அடித்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து மண்ணில் அதிக சதங்கள் இந்திய வீரர்களின் மாபெரும் சாதனை பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் ரிஷப் பண்ட், திலிப் வெங்சர்க்கார், சச்சின் தெண்டுல்கர் ஆகியோரை சமன் செய்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் ராகுல் டிராவிட் 6 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

இந்திய வீராங்கனைக்கு இம்பேக்ட் விருது

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி தொடரை கைப்பற்றி அசத்தியது. முன்னதாக ஒவ்வொரு தொடரிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பி.சி.சி.ஐ. 'இம்பேக்ட் பீல்டர் விருது' வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த தொடரில் இம்பேக்ட் பீல்டராக ராதா யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு இந்த விருதை பி.சி.சி.ஐ. செயலாளர் தேவஜித் சைகியா வழங்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து