எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : தமிழகத்தில் அதிக நாட்கள் முதல்வர் பதவி வகித்ததில் பழனிசாமியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
சுதந்திரதுக்கு பிறகு தமிழகத்தில் 11 பேர் முதல்வர் பதவி வகித்துள்ளனர். இதில், 19 ஆண்டுகள் ( 1969, 1971, 1989, 1996, 2006 என 5 முறை ) முதல்வராக இருந்த கருணாநிதி, அதிக ஆண்டுகள் முதல்வர் பதவியை வகித்தவர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
அடுத்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 1991, 2001, 2011, 2016 என 4 முறை முதல்வரானார். இதில் 2001, 2011 ஆகிய 2 முறை அவரது பதவி காலத்தில் பதவியை இழந்து மீண்டும் முதல்வரானார். இதனால், இவர் 14 ஆண்டுகள் 4 மாதங்கள் முதல்வர் பதவியை வகித்து 2-வது இடத்தில் உள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். 1977, 1980, 1984 என தொடர்ந்து 3 முறை முதல்வராகி சாதனை படைத்தார். பதவியேற்றது முதல் மறையும் வரை 10 ஆண்டுகள் 2 மாதங்கள் தமிழக முதல்வராக இருந்து 3-வது இடத்தில் உள்ளார்.
இந்த பட்டியலில், சுமார் ஒன்பதரை ஆண்டுகள் முதல்வராக இருந்த காமராஜர் 4-வது இடத்தில் உள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் 2017 பிப். 16-ம் தேதி முதல்வராக பொறுப்பேற்ற பழனிசாமி 4 ஆண்டுகள் 2 மாதங்கள் 20 நாட்கள் முதல்வராக பொறுப்பு வகித்து 5-வது இடத்தில் இருந்தார். அதன்பின், 2021 மே 7-ம் தேதி முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் 4 ஆண்டுகள் 2 மாதங்கள் 20 நாட்களை நேற்று முன்தினம் நிறைவு செய்த நிலையில், பழனிசாமியை பின்னுக்குத் தள்ளி, அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர்கள் பட்டியலில் தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


