எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ராணிப்பேட்டை : 35 ஆண்டுகளாக அரசியல் பொது வாழ்க்கையில் உள்ளேன். நான் முதல்வர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ராணிப்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- இந்து மதத்தை மட்டும் நீங்கள் விமர்சிப்பதாக கேட்கிறார்கள். அது சகோதரத்துவமாக இல்லை என்பதுதான் பிரச்சனை. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். இதை ஏன் சுய விமர்சனமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் நம் கேள்வி. தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், வி.சி.க. என அனைவரும் மதச்சார்பின்மை கொள்கையில் உள்ளோம்.
எங்கள் கருத்து இந்து சமூகத்திற்கு எதிரான கருத்து இல்லை. கருத்தியலுக்கு எதிரானதுதான். எடப்பாடி.பழனிசாமி, பா.ஜ.க. வை உடன் வைத்துக்கொண்டு தமிழகத்தை காப்போம் மக்களை மீட்போம் என்கிறார். நாம் மதச்சார்பின்மை காப்போம் என்கிறோம். எடப்பாடி பழனிசாமி அழைத்ததாக நான் கூறினேனா? துணை முதல்வர் பதவி தருவதாக அழைக்கின்றனர். நான் முதல்வர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? நானும் ரவுடிதான் என யார் யாரோ கிளம்புகின்றனர். முதல்வர் ஆக்குங்கள் என்கின்றனர்.
நானும் 35 ஆண்டுகளாக அரசியல் பொது வாழ்க்கையில் உள்ளேன். கலைஞர், ஜெயலலிதா, ஸ்டாலின், ராகுல் என அனைவரோடும் அரசியலில் பயணித்துள்ளேன். கொள்கை அரசியலில் செயல்படும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. சங்பரிவார் தமிழகத்தில் காலுன்றிவிடக்கூடாது என கவலைபடுகின்ற கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. அதனால் தி.மு.க.வுடன் உறுதியாக நிற்கிறோம் பயணிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


