முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் 500 + ரன்களை வாரி வழங்கிய இந்திய அணி

சனிக்கிழமை, 26 ஜூலை 2025      விளையாட்டு
India 2024-02-05

Source: provided

மான்செஸ்டர் : 10 ஆண்டுகளில் முதல் முறையாக அயலகத்தில் ஒரே இன்னிங்ஸில் 500+ ரன்களை இந்திய அணி மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் விட்டுக் கொடுத்துள்ளது. 

இங்கி. 669 ரன்கள்...

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய இங்கிலாந்து அணி 669 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. 

முதல் முறை...

இந்நிலையில்தான் இந்திய அணி ஒரே இன்னிங்ஸில் 500+ ரன்களை எதிரணிக்கு விட்டுக் கொடுத்துள்ளது. வெளிநாட்டில் டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய அணி 500+ ரன்களை விட்டுக்கொடுப்பது இதுவே முதல் முறை. இதற்கு முன்னர் கடந்த 2015-ல் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக ஒரே இன்னிங்ஸில் 572 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. அந்தப் போட்டி டிரா ஆனது. அதற்கு பின்னர் இப்போதுதான் இந்தியா வெளிநாட்டில் 500+ ரன்களை விட்டுக்கொடுத்துள்ளது.

தட்டையான ஆடுகளம்... 

மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃபோர்டு மைதானத்தின் தட்டையான ஆடுகளம் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 186 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி டிரா செய்யும் வகையில் இரண்டாவது இன்னிங்ஸை அணுகுவது தான் சரியாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

மூன்று முறை... 

10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் மூன்று முறை 500+ ரன்களை ஒரே இன்னிங்ஸில் குவித்த இங்கிலாந்து. அதன் விவரம்:

* 2016 - ராஜ்கோட்டில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 537 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டி டிரா ஆனது.

* 2021 - சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்து முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 578 ரன்கள் எடுத்தது. இதில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

* 2025 - மான்செஸ்டரில் டாஸ் வென்று இரண்டாவதாக பேட் செய்து 500+ ரன்களை இங்கிலாந்து கடந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து