முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ம.க. கட்சியின் பரப்புரை பாடலை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்

வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2025      அரசியல்
anbumani 2025-01-03

சென்னை, பா.ம.க. கட்சியின் பரப்புரை பாடலை அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார்.

பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் சமூகநீதிக்கு எதிரான, மக்களை வாட்டி வதைக்கக் கூடிய, மக்களின் துயரங்களைத் துடைக்காமல் விளம்பர மோகத்தில் மகிழ்ச்சியடையும் திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடனும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 1. சமூக நீதிக்கான உரிமை, 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை, 3. வேலைக்கான உரிமை, 4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை , 5. வளர்ச்சிக்கான உரிமை, 6. நல்லாட்சி மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை ,8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை , 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை , 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை ஆகிய 10 வகையான அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்கும் நோக்குடனும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று மாலை தொடங்கி தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதி வரை தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடையவுள்ளது.

அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ளும் இந்த பயணத்திற்காக ' உரிமைப் பயணம் ' என்ற தலைப்பில் பரப்புரை பாடல் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த பாடலை அன்புமணி ராமதாஸ் சற்று முன் அவரது சமூக ஊடகங்கள் வாயிலாகவும், பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து