முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிராஜ் குறித்து மொயின் அலி

புதன்கிழமை, 6 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Mohammed-Siraj 2024-02-17

Source: provided

இந்திய வேகப் பந்துவீச்சாளர் வீரர் சிராஜ் ஓவரில் விளையாடுவது எப்போதும் சவால் மிகுந்தது என முன்னாள் இங்கிலாந்து வீரர் மொயின் அலி தெரிவித்துள்ளார். ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இந்திய அணி கடைசி போட்டியை வென்று 2-2 எனத் தொடரை சமன்படுத்தியது. கடைசி போட்டியில் சிராஜ் முதல் இன்னிங்ஸில் 4, இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார்.இந்தத் தொடரில் சிராஜ் 5 போட்டிகளில் 185.3 ஓவர்கள் வீசி 23 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இது குறித்து முன்னாள் ஆல்ரவுண்டர் மொயின் அலி கூறியதாவது: சிராஜுக்கு எதிராக விளையாடுவது சவாலானது. இங்கிலாந்து தொடரில் சிராஜ் கவனிக்கப்படத்தக்க பந்துவீச்சை வீசினார். அவருடைய ஆற்றல், கோபம், தொடர்ச்சியாக நன்றாக வீசுவது என உலக தரத்தில் பந்து வீசினார். பக்குவமடைந்த சிராஜ் இந்தியாவுக்கு ஆட்ட நாயகனாக மாறினார். அவரை எதிர்த்து விளையாடுவது எப்போதும் சவலானதுதான். பந்தைக் கட்டுப்படுத்துவதுதான் அவரிடம் மிகுதியாக கவர்ந்தது. அதுதான் அவரைச் சிறப்பானவராக மாற்றியது. அவர் உண்டாக்கிய தாக்கத்திற்கு அவருக்கு வாழ்த்துகள் என்றார். 

நிரூபிக்க வேண்டியதில்லை: நெய்மர்

பிரேசிலைச் சேர்ந்த நெய்மர் சமீபத்தில் தனது சிறுவயது கால்பந்து அணியான சன்டோஷ் அணியில் இணைந்தார். சௌதி லீக்கில் காயம் காரணமாக இரண்டு ஆண்டுகளில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார். சமீபத்திய போட்டிய ஒன்றில் ரசிகருடன் கடுமையான வாக்குவாதத்தில் நெய்மர் ஈடுபட்டார். இந்நிலையில், கடைசி போட்டியில் 2 கோல்கள் அடித்து அணியை 3-1 என வெற்றிப்பெற செய்தார். மொத்தமாக 445 கோல்கள், 257 அசிஸ்ட்ஸ் செய்துள்ளார்.

இந்தப் போட்டியைப் பார்க்க கார்லோ அன்செல்லாட்டியின் குழுவைச் சேர்ந்த சிலர் வந்திருப்பதாகக் கூறப்பட்டது. நெய்மர் உடல்தகுதியுடன் இருந்தால் பிரேசில் அணியில் இடம்பிடிக்க வாய்ப்பிருப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து நெய்மரிடம் கேள்விக் கேடகப்பட்டபோது, “நான் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை” எனக் கூறினார். பிரேசிலின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் டோரிவல், “சொந்த அணியினரே நெய்மரின் முக்கியத்துவம் பற்றி அணியில் பேசுகிறார்கள்” எனக் கூறியிருந்தார். தற்போது, புதிய பயிற்சியாளராக ரியல் மாட்ரிட்டின் கார்லோ அன்செலாட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

வாஷிங்டன் சுந்தருக்கு விருது

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்துள்ளது. இதில் முதல் மற்றும் 3வது டெஸ்டில் இங்கிலாந்தும், இரண்டாவது டெஸ்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில் 4வது டெஸ்ட் டிரா ஆனது. இதையடுத்து நடந்த 5வது டெஸ்டில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்ததுடன் தொடரையும் சமன்செய்து அசத்தியது.

இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ ஒவ்வொரு தொடரின் முடிவிலும் அந்த தொடரில் அதிக அளவு தாக்கத்தை ஏற்படுத்திய வீரரை தேர்வு செய்து ’இம்பேக்ட் பிளேயர்’ விருது வழங்கி கவுரவித்து வருகிறது. அந்தவகையில், இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் தாக்கத்தை ஏற்படுத்திய வீரர் விருது ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த விருதை அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் காம்பீர், ஜடேஜா உள்ளிட்டோர் இணைந்து வாஷிங்டன் சுந்தருக்கு வழங்கினர். இந்தத் தொடரில் 284 ரன்கள் குவித்த வாஷிங்டன் சுந்தர், 7 விக்கெட்களையும் கைப்பற்றினார். மேலும் டிராவில் முடிந்த டெஸ்ட் போட்டியில் சதமும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மகிழ்ச்சியாக இருக்கிறேன்: காம்பீர் 

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி லண்டன் ஓவலில் நடைபெற்றது. இதில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாட்டு மண்ணில் ஒரு தொடரின் 5-வது போட்டியில் இந்தியா வெற்றி காண்பது இதுவே முதல் நிகழ்வாகும். இந்த நிலையில் , லண்டனில் இருந்து டெல்லி திரும்பிய இந்திய அணி தலைமை பயிற்சியாளர் காம்பீர் கூறியதாவது,

நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இந்த தொடரில் சிராஜ் புத்திசாலித்தனமாக இருந்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். உண்மையில், அவர் மட்டுமல்ல, முழு அணியும் அற்புதமாக செயல்பட்டிருக்கிறது . கடந்த இரண்டு மாதங்களாக வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். சுப்மான் கில் கேப்டனாக அற்புதமான வேலையைச் செய்திருக்கிறார் . அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து நல்லது செய்வார். என தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து