எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி டெல்லியில் இன்டியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது.
புதுடெல்லி: பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் இன்டியா கூட்டணி உறுதியாக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் காரணமாக சிறுபான்மையினர், தலித்துகள், ஆதிவாசிகள் தங்களின் வாக்குரிமையை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர். எனவே, இது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பதில் இன்டியா கூட்டணி உறுதியாக உள்ளது. மக்களின் வாக்குரிமை திருடப்படக்கூடாது என்பதை சபாநாயகர், மாநிலங்களவை துணைத் தலைவர் மற்றும் அரசாங்கத்துக்கு நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். சிறப்பு தீவிர திருத்தம் வாக்குரிமையை திருடுகிறது” என தெரிவித்தார்.
தேர்தல் ஆணையம் சுதந்திரமான அரசியல் சாசன அமைப்பு என்பதால் அதன் செயல்பாடுகள் குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மக்களவை சபாநாயகரும், மாநிலங்களவைத் துணைத் தலைவரும் கூறுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மல்லிகார்ஜுன கார்கே, “சூரியனுக்கு கீழ் உள்ள அனைத்தும் குறித்தும் விவாதிக்க முடியும். எனவே, சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். அவர்கள் தனிநபர்களின் குடியுரிமையை சந்தேகிக்க முயல்கிறார்கள்.
விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நடைபெறும் எங்கள் போராட்டம் தொடரும். வரும் 11ம் தேதி இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தை நோக்கி இன்டியா கூட்டணி சார்பில் பேரணி நடத்தப்படும்.” என தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் கூட்டத்தில், இன்டியா கூட்டணியை சேர்ந்த திமுக, திரிணமூல் காங்கிரஸ், சிபிஐ(எம்), சிவ சேனா (யுபிடி) உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி டெல்லியில் இன்டியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் இன்டியா கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


