எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
வாஷிங்டன் : போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் உக்ரைன் அதிபர்.
ரஷ்யா- உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர முயற்சி செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக கடந்த 15-ம் தேதி அதிபர் ட்ரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் ஆங்கரேஜ் நகரில் சந்தித்துப் பேசினர். இதைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்பை வாஷிங்டனில் கடந்த 3 தினங்களுக்கு முன்பு சந்தித்துப் பேசினார்.
அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், ஜெர்மனி பிரதமர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், இத்தாலி பிரதமர் மெலோனி, நேட்டோ தலைவர் மார்க் ரூட் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர். சுமார் 2 மணி நேரம் பேச்சுவார்த்தை நீடித்தது.
இதன்பிறகு அமெரிக்க அதிபர் ட்ரம்பும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஒற்றுமையுடன் செயல்படுகின்றன. உக்ரைனுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த ஐரோப்பிய தலைவர்களும் வாஷிங்டனில் குவிந்துள்ளனர். அதிபர் ட்ரம்ப் உடனான பேச்சுவார்த்தை பயனுள்ளதாக அமைந்தது.
குறிப்பாக உக்ரைனின் பாதுகாப்பு குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. உக்ரைனின் பாதுகாப்புக்கு அதிபர் ட்ரம்ப் உறுதி அளித்திருக்கிறார். உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை வழங்கவும் அவர் முன்வந்திருக்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்துப் பேச தயாராக இருக்கிறேன். முதலில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். இதில் முன்னேற்றம் ஏற்பட்டால் அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியதாவது: நேட்டோவில் உக்ரைன் உறுப்பினராக இல்லை. எனினும் அந்த நாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்போம். குறிப்பாக உக்ரைனின் பாதுகாப்பை உறுதி செய்வோம். உக்ரைனுக்கு அமெரிக்க வீரர்களை அனுப்புவது குறித்து பரிசீலனை செய்வேன்.
இதுவரை 6 போர்களை நிறுத்தி உள்ளேன். குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே அணு ஆயுத போர் மூளும் சூழல் உருவானது. அந்த போரை நிறுத்தினேன். தற்போது ரஷ்யா, உக்ரைன் இடையிலான போரையும் நிறுத்துவேன். ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். அப்போது போருக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும். எப்போது போர் நிறைவடையும் என்பதை இப்போதைக்கு உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் போருக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 11 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-08-2025.
20 Aug 2025 -
தங்கம் விலை குறைப்பு
20 Aug 2025சென்னை, இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
-
தனது திருமண நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினருக்கு அறிவுரை
20 Aug 2025சென்னை : எதிர்பார்ப்புகளற்ற அன்பும், விட்டுக்கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என தனது 50-வது திருமண நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இளைய தலைமுறையினருக்கு அறிவுரை கூற
-
ஒண்டிவீரன் நினைவுநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
20 Aug 2025சென்னை : ஒண்டிவீரன் நினைவுநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.
-
இன்று த.வெ.க. மாநில மாநாடு: மதுரையில் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
20 Aug 2025மதுரை : தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெறுவதால் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: கில்லுக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது சரியானது- கவாஸ்கர்
20 Aug 2025புதுடெல்லி, கில்லுக்கு துணை கேப்டன் பதவி கொடுத்தது சரியானது என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.
-
தேசிய சீனியர் தடகள போட்டி: 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உ.பி. வீரர் அபிஷேக் முதலிடம்
20 Aug 2025சென்னை, தேசிய சீனியர் தடகள 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் உ.பி. வீரர் அபிஷேக் முதலிடம் பெற்றார்.
-
இடைத்தரகரை அணுக வேண்டாம்: பக்தர்களுக்கு திருப்பதி கோவில் தேவஸ்தானம் வேண்டுகோள்
20 Aug 2025திருமலை : இடைத்தரகரை அணுக வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
-
ஜார்க்கண்டில் பயன்பாட்டில் இல்லாத ரேஷன் அட்டைதாரர் பெயர்கள் நீக்கம்
20 Aug 2025ராஞ்சி, ஜார்க்கண்டில் பயன்பாட்டில் இல்லாத ரேஷன் அட்டைதாரர் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது.
-
இயல்பு நிலைக்கு திரும்புகிறது மும்பை
20 Aug 2025மும்பை, இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருக்கிறது மும்பை.
-
துணை கேப்டன் பதவியில் இருந்து படேல் நீக்கம்; விளக்கம் கோரும் முன்னாள் வீரர்
20 Aug 2025மும்பை, துணை கேப்டன் பதவியில் இருந்து அக்சர் படேல் நீக்கத்திற்கு விளக்கம் வேண்டும்- முன்னாள் வீரர் காட்டமாக தெரிவித்தனர்.
-
பா.ஜ.க., என்.ஆர்.காங். மட்டுமின்றி எதிரிகள் பலர் உள்ளனர்: நாராயணசாமி பரபரப்பு பேச்சு
20 Aug 2025புதுச்சேரி, பா.ஜ.க., என்.ஆர்.காங். மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர் உள்ளதாக நாராயணசாமி பேசினார்.
-
பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை நீக்கும் மசோதா மக்களவையில் தாக்கல்
20 Aug 2025புதுடெல்லி : பிரதமர், முதல்வர்கள், அமைச்சர்களை நீக்கும் மசோதாக்களை மக்களவையில் அமித் ஷா தாக்கல் செய்தார்.
-
மதுரை த.வெ.க. மாநாடு: 100 அடி கொடிக்கம்பம் கீழே விழுந்ததால் திடீர் பரபரப்பு
20 Aug 2025மதுரை : மதுரை த.வெ.க. மாநாட்டில் நடப்பட முயன்ற 100 அடி கொடிக்கம்பம் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
அரசமைப்பு சட்டத்திருத்த மசோதா: அமித் ஷாவுக்கு முதல்வர் கண்டனம்
20 Aug 2025சென்னை, அரசமைப்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்த அமித் ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
-
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது ட்ரம்ப் வரி விதிப்பு ஏன்..? அமெரிக்கா புது விளக்கம்
20 Aug 2025நியூயார்க் : உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவே இந்தியா மீது ட்ரம்ப் வரி விதிப்பு குறித்து அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.
-
பட்டியல் சமூகத்துக்கான இடஒதுக்கீடு: கர்நாடக அமைச்சரவை முக்கிய முடிவு
20 Aug 2025பெங்களூரு : பட்டியல் சமூகத்துக்கான இடஒதுக்கீட்டை பிரிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
-
பஞ்சுக்கு இறக்குமதி வரி விலக்கு: தமிழக ஜவுளி தொழில் துறை வரவேற்பு
20 Aug 2025கோவை : பஞ்சுக்கு 11 சதவீதம் இறக்குமதி வரி விலக்கு அளித்ததை தொடர்ந்து தமிழக ஜவுளி தொழில் துறையினர் வரவேற்றுள்ளனர்.
-
ஆசிய கோப்பை தொடர்: ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுப்பு: கொந்தளித்த முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த்
20 Aug 2025டெல்லி, ஆசிய கோப்பையில் ஷ்ரேயஸ் ஐயருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ஷ்ரேயாஸ் ஐய்யரை எடுக்காதது நியாயமற்ற முடிவு- அஸ்வின்
20 Aug 2025டெல்லி, ஷ்ரேயாஸ் ஐய்யரை எடுக்காதது நியாயமற்ற முடிவு என்று அஸ்வின் கூறினார்.
-
தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக்: மான்செஸ்டர் ஒரிஜினல்ஸ் அணியை வீழ்த்திய ட்ரெண்ட் ராக்கெட்ஸ்
20 Aug 2025லண்டன், இங்கிலாந்தில் தி ஹண்ட்ரட் கிரிக்கெட் லீக் (100 பந்துகள் கிரிக்கெட்) தொடர் நடைபெற்று வருகிறது.
-
போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
20 Aug 2025வாஷிங்டன் : போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கிறார் உக்ரைன் அதிபர்.
-
மக்கள் குறைதீர் முகாமில் டெல்லி மாநில முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் : ராஜ்கோட்டை சேர்ந்தவர் கைது
20 Aug 2025புதுடெல்லி : டெல்லி முதல்வர் ரேகா குப்தா நேற்று காலை தனது இல்லத்தில் நடந்த மக்கள் குறை தீர் முகாமில் கலந்து கொண்டிருந்தபோது மனு கொடுக்கவந்த நபர் ஒருவர் அவரை தாக்கியதால்
-
மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டம் வென்றார் மணிகா
20 Aug 2025ஜெய்ப்பூர் : ‘மிஸ் யுனிவர்ஸ் இந்தியா’ பட்டத்தை மணிகா விஸ்வகர்மா வென்றுள்ளார்.
-
மழை பாதிப்பால் மின்சாரம் துண்டிப்பு: இருளில் மூழ்கியது ஊட்டி
20 Aug 2025ஊட்டி : மழை பாதிப்பால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஊட்டி நகர் முழுவதும் இருளில் மூழ்கியது