எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ‘தி வயர்’ ஊடகத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் ஆகியோருக்கு காவல்துறை சம்மன் விடுக்கப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘தி வயர்’ ஊடகத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் ஆகியோருக்கு சம்மன் விடுத்துள்ள அசாம் மாநிலக் காவல்துறையின் நடவடிக்கைக்கு எனது வன்மையான கண்டனங்கள்.
இதுதொடர்பான மற்றொரு வழக்கில் சில நாட்களுக்கு முன்புதான், உச்ச நீதிமன்றம் கைது நடவடிக்கைக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், இந்த அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளன. அதுவும் முதல் தகவல் அறிக்கையின் படியையோ, வழக்கின் விவரங்களையோ வழங்காமல், வெறுமனே கைது மிரட்டல் மட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
நீக்கப்பட்ட தேசதுரோகப் பிரிவுக்கு மாற்றாகவே பிஎன்எஸ் பிரிவு 152 சுதந்திரமான பத்திரிகைத் துறையைக் கட்டுப்படுத்தத் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. கேள்வி கேட்பதே தேசதுரோகமாகக் கருதப்பட்டால் மக்களாட்சி பிழைக்கமுடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


