எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருக்கிறது மும்பை.
மகாராஷ்டிராவில் மும்பை உள்பட பல மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. கடந்த 3 தினங்களுக்கு முன்பு இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்து மக்கள் பாதிக்கப்பட்டனர். மும்பை, தானே, பால்கர், ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் மத்திய மராட்டியத்தின் மலையோர பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் நேற்று முன்தினம் 2-வது நாளாக சிவப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்த மாவட்டங்களில் ஏற்கனவே பெய்த கனமழையால் மக்கள் பரிதவித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் பெய்த அடைமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.
குறிப்பாக மும்பையில் 24 மணி நேரத்தில் 30 செ.மீ. மழையும், 6 மணி நேரத்தில் மட்டும் 20 செ.மீ. மழையும் பதிவானது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. மித்தி நதியில் கரைபுரண்டு ஓடிய வெள்ளம் குர்லாவில் உள்ள குடிசை பகுதிகளுக்குள் புகுந்தது. அங்கு வசித்து வந்த 350-க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டனர். மழையால் கடும் சிரமத்தை சந்தித்த மக்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை சற்று குறையத்தொடங்கியது. நேற்று காலை முதல், சாலைப் போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இதையடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கி உள்ளனர். மும்பையின் முக்கிய பகுதியான அந்தேரியில் கடந்த சில நாட்களாக கடைகளை மூடியே வைத்திருந்த வணிகர்கள், நேற்று கடைகளை திறந்தனர். கடைகளின் உள்பகுதியையும், வீதிகளையும் அவர்கள் சுத்தப்படுத்தினர். நாளை முதல் மழையின் தீவிரம் குறையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


