முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உரிமை, நலன், வளர்ச்சிக்கான குரலாக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் - செல்வப்பெருந்தகை

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2025      தமிழகம்
selvaperunthagai

Source: provided

சென்னை: உரிமை, நலன், வளர்ச்சிக்கான குரலாக மு.க.ஸ்டாலின் இருக்கிறார் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று  எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், எனது தனிப்பட்ட சார்பாகவும், மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

சமூக நீதி, சமத்துவம், அன்பு, மனிதநேயம் ஆகிய தத்துவங்களை வழிகாட்டியாகக் கொண்டு, தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் கோட்பாடுகளை மக்கள் வாழ்வில் செயலாக்கி வரும் அரிய தலைமைத்துவம் கொண்டவர் மு.க. ஸ்டாலின். கடந்த ஆண்டுகளில் கட்சியின் ஒற்றுமையையும் வலிமையையும் வளர்த்ததோடு மட்டுமல்லாது, தமிழக அரசியலில் மக்கள் நம்பிக்கையை பலமடங்கு உயர்த்தியுள்ளார். தமிழக மக்களின் உரிமை, நலன், வளர்ச்சி ஆகியவற்றிற்காக எப்போதும் உறுதியான குரலாக இருந்து வருகிறார். இந்நாளில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வெற்றிகரமாக எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாகவும், எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து