Idhayam Matrimony

மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் கவர்னர்கள் நிலுவையில் வைப்பதை நியாயப்படுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட்

வியாழக்கிழமை, 28 ஆகஸ்ட் 2025      இந்தியா
Supreme-Court 2023-04-06

புது தில்லி, மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்பட்டு கவர்னர்களுக்கு அனுப்பப்படும் மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதை நியாயப்படுத்த முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்தருக்கிறது.

சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி மாநில அரசுகளால் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் காலக்கெடு விதித்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

இவ்வாறு, நீதித்துறை, குடியரசுத் தலைவர் மற்றும் கவர்னர்களுக்கு உத்தரவிட முடியுமா? என விளக்கம் கேட்டு 14 கேள்விகள் அடங்கிய குறிப்பினை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு அனுப்பியிருந்தார்.

இதன் மீது, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையின்போது, பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகள் சார்பில் வழக்குரைஞர்கள் வாதங்களை முன் வைத்து வந்தனர்.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாநில அரசுகளால் அனுப்பி வைக்கப்படும் மசோதாக்கள் மீது கவர்னர்கள் எந்த முடிவும் எடுக்காமல் வைத்திருப்பதை நியாயப்படுத்த முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

கவர்னர்களிடம் சுப்ரீம் கோர்ட் கேள்விகள் கேட்பதில் எந்த தவறும் இல்லை எனவும் மத்திய அரசிடம் நீதிபதிகள் கருத்துக் கூறியிருக்கிறார்கள்.

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரங்களில் நீதிமன்றம் உத்தரவிடுவது சரியானதா என ஆய்வு செய்ய வேண்டும். கவர்னர்கள், மாநில அரசு சட்டப்பேரவைகளில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாவுக்கு ஒப்புதல் தரவில்லை எனில் மாநில அரசுகள் வழக்குத் தொடுக்க முடியாது என்றும், மசோதாக்கள் மீது ஏன் முடிவெடுக்கவில்லை என்று கவர்னர்களிடம் காரணத்தை தெரிவிக்கும்படி சுப்ரீம் கோர்ட் கேட்க முடியுமா என்றும் மத்திய அரசு தரப்பில் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த உள்ள நீதிமன்ற நீதிபதிகள், கவர்னர்களிடம் சுப்ரீம் கோர்ட் கேள்விகள் கேட்பதில் எந்த தவறும் இல்லை என்று பதிலளித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து