முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தரப்பு டி20 தொடர்: வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்

சனிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
T20-Pakistan-2025-08-30

சார்ஜா, ஆசிய கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) அணிகள் இடையே முத்தரப்பு டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி இந்த தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதன் முதலாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் விளையாடின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சல்மான் ஆகா 53 ரன்கள் அடித்தார். ஆப்கானிஸ்தான் தரப்பில் பரீத் அகமது 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஆரம்பம் முதலே பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. தொடக்க ஆட்டக்காரர் ஆன குர்பாஸ் (38 ரன்கள்), ரஷித் கான் (39 ரன்கள்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. 19.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த அந்த அணி 143 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பாகிஸ்தான் 39 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் ஹரிஸ் ரவூப் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதில் நேற்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் - யுஏஇ அணிகள் மோதுகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து