முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 12 செப்டம்பர் 2025      இந்தியா
Gun 2023-10-05

சண்டிகர், சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.

சத்தீஸ்கர் மாநிலம், பிஜாப்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு அதிரடிப்படை போலீசார், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கோப்ரா பிரிவு போலீசார், உள்ளூர் போலீசாருடன் சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்புக்கும் நடந்த மோதலில் மாவோயிஸ்டுகள் 2 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு மட்டும் சத்தீஸ்கரில் பல்வேறு என்கவுன்டர்களில் 243 நக்சல்கள் கொல்லப்பட்டனர் என தரவுகள் தகவல் தெரிவிக்கின்றன. இதைத்தவிர, நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்டுகள் 10 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து