முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செப்டம்பர் மாதத்திற்கான ஐ.சி.சி. விருது அபிஷேக், மந்தனாவுக்கு அறிவிப்பு

வியாழக்கிழமை, 16 அக்டோபர் 2025      விளையாட்டு
16-Ram-90-b

Source: provided

துபாய்: செப்டம்பர் மாதத்திற்கான ஐ.சி.சி. விருதை இந்தியாவின் அபிஷேக், மந்தனா வென்றுள்ளனர்.

அதிரடி ஆட்டக்காரர்...

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாதந்தோறும் சிறந்த வீரரை தேர்வு செய்து கவுரவிக்கிறது. அந்த வகையில் செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் மூலம் இந்த விருதை தட்டி சென்றுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 3 அரைசதங்களுடன் 314 ரன்கள் குவித்தார். இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற வகையில் தொடர் நாயகன் விருதை இவர் தட்டி சென்றார்.

ஸ்மிருதி மந்தனா தேர்வு...

மகளிருக்கான செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையாக இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தொடர் நாயகி விருதை மந்தனா வென்றார். 3 போட்டிகளில் விளையாடிய மந்தனா 1 சதத்துடன் 308 ரன்கள் குவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து