முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் சாலை உட்கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.7,737 கோடி நிதி : முதல்வர் புபேந்திரா பட்டேல் அறிவிப்பு

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2025      இந்தியா
Bhupendra-Patel 2025-02-04

Source: provided

காந்திநகர் : குஜராத்தில் சாலை உட்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.7,737 கோடி நிதி ஒதுக்கிய முதல்வர் புபேந்திரா பட்டேல் அறிவித்துள்ளார்.

குஜராத்தில் சாலைகள் மற்றும் கட்டிட துறைகளின் பல்வேறு திட்டங்களின் கீழ் மொத்தம் 124 திட்ட பணிகள் நடைபெறுவதற்காக முதல்வர் புபேந்திரா பட்டேல் ரூ.7,737 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

பிரதமர் மோடியின் வளர்ச்சியடைந்த பாரதம் எள்ற தொலைநோக்கு பார்வைக்கான இலக்கை நிறைவேற்று வதற்காக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஒருங்கிணைந்த மற்றும் சிறந்த முறையிலான சாலை உட்கட்டமைப்பு நெட்வொர்க்கை குஜராத்தில் கட்டமைப்பதற்காகவும், வளர்ச்சியடைந்த குஜராத் என்பதன் வழியே எளிமையான போக்குவரத்து வசதியை முதல்வர் உறுதி செய்து வருகிறார் என அதுபற்றிய முதல்வர் அலுவலகம் வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

இதன்படி, 809 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய 9 அதிவிரைவு சாலைகளை கட்டமைக்க ரூ.5,576 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அதிக போக்குவரத்து நெருக்கடியான நிலையிலும், பாதுகாப்பு, வேகம் மற்றும் வசதி ஆகியவற்றை மேம்படுத்தி தரும் நோக்கில் இந்த திட்டம் அமையும்.

இதேபோன்று, பருவகாலத்திற்கு ஏற்ப மீள்தன்மையுடன் இருக்க கூடிய மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த மேம்பாட்டுடன் கூடிய சாலைகளை குஜராத்தில் உருவாக்குவதற்காக ரூ.1,147 கோடிக்கு முதல்வர் ஒப்புதல் அளிக்கப்ட்டு உள்ளது. இந்த திட்டத்தின்படி, 271 கி.மீ. தொலைவுக்காக மொத்தம் 20 திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும். இதுதவிர, மாநில சாலைகளின் மேற்புற தரம் மேம்படும் வகையிலான 803 கி.மீ. தொலைவை உள்ளடக்கிய 79 திட்டப்பணிகளுக்கு ரூ.986 கோடி நிதி ஒதுக்கவும் முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து