முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.பி. சிலம்பரசன் தீபாவளி வாழ்த்து

சனிக்கிழமை, 18 அக்டோபர் 2025      தமிழகம்
SP 2025-10-18

Source: provided

திருநெல்வேலி : தீபாவளி பண்டிகை வாழ்த்துகளை எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வகையில், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் தலைமையில், மாவட்டம் முழுவதும் விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், கோவில்கள், பஜார்கள், முக்கிய வீதிகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்ட எஸ்.பி. உத்தரவின்படி, ஏ.டி.எஸ்.பி.க்கள், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், சட்டம் ஒழுங்கு காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், பட்டாலியன் காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் என சுமார் 1,600 போலீஸ் பணியாளர்கள் தீபாவளி பாதுகாப்பு பணிக்காக மாவட்டம் முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் 45 இருசக்கர வாகனங்கள் மற்றும் 36 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் போலீசார் 24 மணி நேரமும் கழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 53 இடங்களில் வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சந்தேகத்திற்கிடமான நபர்கள், கெட்ட நடத்தைக்காரர்கள் மற்றும் வாகனங்கள் மீது கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

கடந்த காலங்களில், தீபாவளி பண்டிகையின் போது நடைபெற்ற குற்ற வழக்குகள் பற்றிய தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் அடிப்படையில் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படும் இடங்களில் போலீஸ் பணியாளர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர். எவ்வித சம்பவமும் நிகழாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் பட்டாசு விற்பனை மையங்களில் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறை இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 4 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 6 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 6 months ago
View all comments

வாசகர் கருத்து