முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயணிகள் முன்பதிவு குறைவு எதிரொலி: 6 சிறப்பு ரயில்கள் ரத்து

சனிக்கிழமை, 25 அக்டோபர் 2025      தமிழகம்
Train 2023-04-06

Source: provided

சென்னை: பயணிகள் முன்பதிவு குறைவு 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

குறைவான பயணிகளே டிக்கெட் முன்பதிவு செய்துள்ளதால் மைசூருவில் இருந்து இயக்கப்படும் 6 சிறப்பு ரயில்களை தென்மேற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. மைசூரு - நெல்லை இடையே திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் சிறப்பு ரயில் (வண்டி எண் 06239/06240) வரும் 27-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 25-ந் தேதி வரை இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ரயில் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல், மைசூரு - காரைக்குடி (30-ந் தேதி முதல் நவம்பர் 29-ந் தேதி வரை) இடையே வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06243/06244) ரத்து செய்யப்படுகிறது. மேலும், மைசூரு - ராமேஸ்வரம் இடையே வரும் 27, 28-ந் தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில் (06237/06238) ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து