முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடிவா..? - இந்திய முன்னணி வீரர் விராட் கோலி பதில்

திங்கட்கிழமை, 1 டிசம்பர் 2025      விளையாட்டு
Virat

Source: provided

மும்பை : ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளதாகவும், டெஸ்ட் போட்டிகளில் விளையாடப் போவதில்லை என்றும் இந்திய வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மோசமான தோல்வி...

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. சொந்த மண்ணில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான தோல்வியை சந்தித்த இந்திய அணியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சிக்கத் தொடங்கினர். அணியில் மூத்த வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இல்லாதது மோசமான தோல்விக்கு காரணமாக அமைந்ததாகவும் கருத்து தெரிவித்தனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில்... 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, பி.சி.சி.ஐ. தரப்பிலிருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாக வதந்தி பரவியது. இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாடவுள்ளதாகக் கூறி, டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் விளையாடவுள்ளதாக பரவிய வதந்திகளுக்கு விராட் கோலி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில்...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நிறைவடைந்த பிறகு விராட் கோலியிடம் எதிர்காலத்திலும் ஒரு வடிவிலான போட்டிகளில் (ஒருநாள் போட்டிகளில்) மட்டுமே விளையாடப் போகிறீர்களா எனக் கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு விராட் கோலி பதிலளித்ததாவது: ஆமாம். நான் தொடர்ந்து ஒரு வடிவிலான போட்டிகளில் (ஒருநாள் போட்டிகளில்) மட்டுமே விளையாடப் போகிறேன். எதிர்காலத்திலும் இந்த நிலையே தொடரப் போகிறது என பதிலளித்தார்.

135 ரன்கள் குவிப்பு...

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 120 பந்துகளில் 135 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடி சதம் விளாசிய அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு சர்வதேச டி20 போட்டிகளிலிருந்தும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் விராட் கோலி ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து