Idhayam Matrimony

ஈ.பி.எஸ். ஆட்சி தூய்மையான ஆட்சி இல்லை - செங்கோட்டையன் தாக்கு

திங்கட்கிழமை, 1 டிசம்பர் 2025      தமிழகம்
Sengottaiyan 2023-04-20

Source: provided

சென்னை : ஈ.பி.எஸ். ஆட்சி தூய்மையான ஆட்சி இல்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

எடப்பாடி பழனிசாமி ஆட்சி தூய்மையான ஆட்சி இல்லை. எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சியில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இல்லை. தான் யாருக்கும் காலக்கெடு விதிக்கவில்லை, அனைவரையும் ஒன்றிணைக்க பேச்சுவாத்தைதான் நடத்தினேன். 5-ம் தேதிக்கு முன்பு வரை ஓ.பி.எஸ். டி.டி.வி. தினகரனிடம் நான் பேசவில்லை. ஈ.பி.எஸ். பொய் சொல்கிறார். தன்னை வெளியே அனுப்ப வேண்டும் என்பதுதான் ஈ.பி.எஸ்.சின் ஆசை. அதை ஏதோ ஒரு காரணம் கூறி செய்துவிட்டார். வேண்டுமென்றே ஒரு குற்றச்சாட்டை சொல்லி என்னை வெளியே அனுப்பினார்கள். என்னைப் பொறுத்தவரை என்னுடைய பயணங்கள் சரியாக இருக்கும். கோபிசெட்டிபாளையத்தில் ஈ.பி.எஸ்.க்கு கூடியது கூட்டப்பட்ட கூட்டம். ஈ.பி.எஸ். கூட்டத்திற்காக வெளிமாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். 2021ல் மக்கள் வழங்கிய தீர்ப்பே எடப்பாடி பழனிசாமிக்கான பதிலாக இருக்கும்.

யார் சொல்லியும் நான் த.வெ.க.வில் இணையவில்லை. ஒவ்வொருவரின் கருத்துக்கும் பதில் சொல்ல முடியாது. தெளிவாக முடிவெடுத்து த.வெ.க.வில் இணைந்துள்ளேன். அமித்ஷா சொல்லி தவெகவில் இணைந்ததாக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியதற்கு செங்கோட்டையன் பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து