முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலி குறித்து யான்சென்

திங்கட்கிழமை, 1 டிசம்பர் 2025      விளையாட்டு
Virat-Kohli 2025-06-17

Source: provided

விராட் கோலி போன்ற உலகத் தரத்திலான வீரர்கள் நன்றாக ரன்கள் குவித்து விளையாடத் தொடங்கிவிட்டால், அவர்களை தடுத்து நிறுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என தென்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் மார்கோ யான்சென் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது: பந்துவீச்சாளர்கள் அவர்கள் வீசும் முதல் சில பந்துகளில் விக்கெட் எடுக்க வேண்டும். உலகத் தரத்திலான வீரர்களுக்கு எதிராக பந்துவீசும்போது, அவர்களை ஆட்டமிழக்கச் செய்வது மிகவும் கடினம். ஒரு பேட்டரை அவர் சந்திக்கும் முதல் 10 அல்லது 15 பந்துகளில் ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என எப்போதும் நினைப்பேன். 

ஆனால், முதல் 10, 15 பந்துகளில் விக்கெட்டினை இழக்காமல் அவர்கள் நிலைத்து நின்று ஆடத் தொடங்கிவிட்டால், அதன் பின் அவர்களது விக்கெட்டினை வீழ்த்துவது மிகவும் கடினம். விராட் கோலி விளையாடுவதைப் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். அவர் விளையாடியதை தொலைக்காட்சி மூலமாகப் பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால், தற்போது அவருக்கு எதிராக பந்துவீசி விக்கெட் எடுக்க முடியாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அதே சமயம், அவர் விளையாடியதைப் பார்ப்பதற்கு ஒருபுறம் மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் மிகவும் சிறப்பாக ஷாட்டுகளை தேர்ந்தெடுத்து விளையாடினார் என்றார்.

_____________________________________________________________________________________________________________

காம்பீர் குறித்து டி.வில்லியர்ஸ்

காம்பீர்  உணர்ச்சிவசப்படும் நபர் என்பதால் அவர் பயிற்சியாளராக இருப்பது இந்திய அணிக்கு நல்லதல்ல என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- கவுதம் காம்பீர்  எப்படிப்பட்டவர் என்பதை நான் அறிவேன். அவர் ஒரு உணர்ச்சிவசப்படும் வீரர். இத்தகைய நபர் ஓய்வறையில், அதுவும் பயிற்சியாளராக இருப்பது நல்ல விஷயமல்ல. இப்படிக் கூறும்போது, திரைக்குப் பின்னால் அவர் அப்படித்தான் இருக்கிறார் என்று சொல்வதாக ஆகாது. சில வீரர்கள் முன்னாள் வீரர்களுடன் இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள். சிலர் இந்திய அணிக்காக விளையாடாதவர் பயிற்சியாளராக இருந்தால் சவுகரியமாக உணர்வார்கள். கம்பீருக்கு பயிற்சியாளராகும் அனுபவம் உள்ளது.

காம்பீர்  குறித்த கேள்வி கடினமானது. தென் ஆப்பிரிக்க அணியையே எடுத்துக் கொள்ளுங்கள். தற்போதைய பயிற்சியாளரான சுக்ரியுடன் நான் பணியாற்றியதில்லை. காம்பீர், ரியான் டென் டஸ்கேட், மோர்னே மோர்கெல் ஆகியோருடன் இந்திய ஓய்வறையில் நான் இருந்ததில்லை. வெளியில் பார்க்க இது ஒரு வலுவான கூட்டணி போல் தெரிகிறது. ஆனால் திரைக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை யார் அறிவார்கள்? ஒவ்வொரு வீரருக்கும் பயிற்சியாளர் என்பவர் வெவ்வேறு விதமாகவே தெரிப்பார். எப்படியிருந்தாலும் உணர்ச்சிவசப்படும் நபர் பயிற்சியாளராக இருப்பது நல்லதல்ல" என்று கூறினார்.

_____________________________________________________________________________________________________________

யூ.ஏ.இ. புல்ஸ் அணி சாம்பியன் 

அபுதாபி டி 10 லீக் தொடரில் இறுதிப்போட்டிக்கு ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ் மற்றும் பொல்லார்ட் தலைமையிலான யூ.ஏ.இ. புல்ஸ் அணிகள் தகுதி பெற்றன. இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யூ.ஏ.இ. புல்ஸ் அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. 

அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 30 பந்துகளில் 98 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனையடுத்து 151 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்பின் ஸ்டாலியன்ஸ் 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் மட்டுமே எடுத்து 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 30 பந்துகளில் 98 ரன்களை குவித்த டிம் டேவிட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து