முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மூளை சுறுசுறுப்பாக இருக்க 6 வழிகள்

Image Unavailable

மூளையை தினந்தோறும் சுறுப்பாக வைத்திருக்க 6 வழிகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்க, அதிக ஈடுபாடுடன் செயல்பட புதிர்களை விடுவிப்பது அவசியம். சுடோகோ, குறுக்கெழுத்து போன்றவை உங்களது நினைவில் தேங்கியிருக்கும் பழைய விஷயங்களை மீட்டெடுக்க உதவும். செஸ் விளையாடுவது, புதிய மொழிகளைக் கற்பது போன்றவையும் சிறந்த வொர்க் அவுட்கள் ஆகும். எனவே, பெரும்பாலான தொழில்முனைவோரின் வெற்றிக்கு, இது முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் மார்க் கியூபன் ஆகியோர் புத்தக படிப்பில் வெற்றி பெற்றவர்கள்.

இதுகுறித்து பஃபெட் கூறும்போது, “ஒவ்வொரு நாளும் குறைந்தது 500 பக்கங்களைப் படியுங்கள்” இது கூட்டு வட்டி போன்றது என்று அவர் பல கையேடுகள் மற்றும் ஆவணங்களை சுட்டிக்காட்டினார். மேலும், அவர் “அறிவு வளர மற்றும் மூளை சுறுசுறுப்பாக செயல்பட புத்தகங்களை படிப்பது நல்லது” என்றார். படிப்பது என்ற செயல்முறை  மூளையை கூர்மையாக்கி, நினைவுத்திறனை மேம்படுத்தும். வாசித்தலோடு தொடர்புடைய மொழியாற்றல், பார்வை, கற்றல் மற்றும் நரம்பியல்  இணைப்பு போன்ற அனைத்து செயல்பாடுகளையும் இணைக்கும் சவாலான பணிகளை படிப்பு என்னும் ஒரே செயலால் செய்துவிட முடியும். நம்முடைய நீண்ட கால நினைவாற்றலுக்கு தூக்கம் இன்றியமையாததாகின்றது. மூளை புத்துணர்ச்சியாக இருக்க கேளுங்கள், கேளுங்கள், கேட்டுக் கொண்டே இருங்கள்.

ஏராளமான புதிய நல்ல விஷயங்களை கேட்டு கொண்டே இருக்க வேண்டும். நாம் நமது வாழ்க்கையில் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதன் மூலம், மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. கவலைகள் இருக்கக் கூடாது. மன  அழுத்தம் தரும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும். உடனடியாக மாற்று செயல்களில் ஈடுபடுவதன் மூலம் கவலையைத் திசை திருப்பி மீண்டும்  புத்துணர்ச்சியாக செயல்பட முடியும். யோகா, உடற்பயிற்சி போன்றவற்றிலும் ஈடுபடலாம். ஓர் இசையைக் கற்றுக் கொள்ளும் போதும், உடற்பயிற்சி  மேற்கொள்ளும் போதும் மன அழுத்தம் குறைகிறது. மூளை சுறுசுறுப்பாகிறது என்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்