முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

துரியன், பலாப்பழங்களை கொண்டு போனை சார்ஜ் செய்யலாம்

Image Unavailable

சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர், துரியன் பழக் கழிவுகளை கொண்டு சூப்பர் மின்தேக்கிகளாக மாற்ற முடிந்தது, இதன் மூலம் ஆற்றலை சீராக வெளியேற்ற முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக பரிசோதனை முறையில், இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவர் தங்கள் போன், மடிக்கணினி மற்றும் பிற அன்றாட கேட்ஜெட்களை சார்ஜ் செய்ய முடியும். துரியன் மற்றும் பலாப்பழங்களிலிருந்து வரும் கழிவுகளை “விரைவான மின்சார சார்ஜ் செய்ய” energy stores-களாக மாற்றலாம். துரியன் மற்றும் பலாப்பழங்கள் இந்த ஆய்வுக்கு ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டன, ஏனெனில் அவற்றின் போரோசிட்டி மற்றும் பெரிய பரப்பளவு காரணமாக அவை  தேர்வு செய்யப்பட்டன.

 

துரியன் மற்றும் பலா-பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் சூப்பர்-மின்தேக்கிகள் தற்போது பயன்படுத்தப்படும் பொருட்களை விட கணிசமாக சிறப்பாக செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். ஒப்பீட்டளவில் விலையுயர்ந்த கிராபெனின் அடிப்படையிலான பொருட்களுக்கு எதிராக ஒரு வலுவான போட்டியை உருவாக்கலாம். மேலும் இந்த முறை, வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளுக்கு உதவுவதோடு, புதைபடிவ எரிபொருளை ஆற்றலாக மாற்றுவதற்கான தற்போதைய முறைகளுக்கு ஒரு மாற்றையும் வழங்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்