முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

பிரசவத்துக்கு முன்பாகவே 21 வாரத்தில் பிறந்து உயிர் பிழைத்த குழந்தை

Image Unavailable

ஒரு சில குழந்தைகள் பிரசவத்துக்கு முன்பாகவே குறை பிரசவத்தில் பிறப்பதுண்டு. அவை 8 அல்லது 9 மாதத்தில் பிறந்தாலும் போதிய வளர்ச்சி இருந்தால் அவற்றை இன்குபேட்டர் எனப்படும் மருத்து பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து பராமரித்து தேற்றி விடுவர். ஆனால் உலகின் மிகப் பெரிய அதிசயமாக வெறும் 21 வாரத்தில் பிறந்த குழந்தை தற்போது வளர்ச்சி அடைந்து உயிர் பிழைத்துள்ளது. இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள அலபாமா பகுதியைச் சேர்ந்த தம்பதிக்குத்தான் கடந்த ஆண்டு ஜூலையில் வெறும் 21 வாரத்தில் குழந்தை பிறந்துள்ளது. பிறக்கும் போது அதன் எடை வெறும் 420 கிராம் மட்டுமே. பொதுவாக பிரசவ காலம் என்பது 280 நாட்கள், ஆனால் இந்த குழந்தை 148 நாட்களிலேயே பிறந்து விட்டது. மிகவும் நுட்பமான மருத்துவ கவனிப்பின் மூலம் அந்த குழந்தை தற்போது 16 மாத குழந்தையாக உயிர் பிழைத்துள்ளது. இதில் மற்றொரு அதிசயமாக இரட்டையராக பிறந்த இந்த குழந்தையுடன் பிறந்த மற்றொரு பெண் குழந்தை பிறந்த ஒரு நாளிலேயே இறந்து விட்டது என்பதுதான். இந்த குழந்தையை பிரசவம் பார்த்த டாக்டர் பிரெய்ன் சிம்ஸ் கூறுகையில் எனது 20 ஆண்டுகால மருத்துவ அனுபவத்தில் இப்படி ஒரு சம்பவத்தை நான் பார்த்ததேயில்லை என வியந்துள்ளார். இந்த செய்தி தற்போது உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்