ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவிலில் நடிகர் விஜயகாந்த் குடும்பத்துடன் சாமி தரிசனம்

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      அரசியல்

 

ஸ்ரீவில்லி, பிப். 16.

ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் குடும்பத்துடன் ஆண்டாளை வழிபட்டார். 

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று(15ந்தேதி) அதிகாலை மனைவி பிரேமலதா மற்றும் 2 மகன்களுடன் ஸ்ரீவில்லி ஆண்டாள் கோவிலுக்கு திடீர் வருகைதந்தார். அப்போது கோவில் வாசலில் அர்ச்சகர் வாரிமுத்துபட்டர்,தேமுதிக ஒன்றிய செயலாளர் ஜப்பான் பாலமுருகன், போலீஸ் பாலாஜி உட்பட அக்கட்சியினர் திரண்டு வந்து வரவேற்றனர்.

பின்னர் விஜயகாந்த் குடும்பத்துடன் ஆண்டாள் சன்னிதி,வடபத்ரசயனார் சன்னிதி,பெரியாழ்வார், சக்கரத்தாழ்வார் சன்னிதிகளில் பய பக்தியுடன் சாமிதரிசனம் செய்து கோவிலில் வழங்கிய சர்க்கரை பொங்கலை ருசித்து சாப்பிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடையே நான் ஆண்டாள் கோவிலுக்கு பல தடவை வந்துள்ளேன். மனைவி பிரேமலதா தற்போது முதன்முறையாக இங்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார். நான் கோவிலுக்கு வந்து சாமி கும்பிடுவது அதிசயம் அல்ல. வெளியே பகுத்தறிவு போர்வைபோர்த்தி பின்னர் ரகசியமாக கோவிலுக்குள் வந்து சாமி கும்பிடும் ஆளும்கட்சிகாரர்கள் இங்கு வந்தால்தான் அதிசயம் என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: