பத்மநாபா கோயிலில் பாதுகாப்பு பெட்டகம் கட்ட உத்தரவு

வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

புதுடெல்லி,பிப்.24 - திருவனந்தபுரம் பத்மநாபாசுவாமி கோயிலில் உடனடியாக பாதுகாப்பு பெட்டகம் கட்ட சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. பத்மநாபா கோயிலில் உள்ள ரகசிய அறைகளில் இருந்து ஏராளமான தங்கநகைகள், வைரம்,வைடூரியம், முத்துக்கள் ஆகியவைகள் குவியல் குவியலாக கண்டுஎடுக்கப்பட்டு அவைகளை மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன் மதிப்பு சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் என்னமோ தெரியவில்லை பத்மநாபாசுவாமி கோயிலில் உடனடியாக பாதுகாப்பு பெட்டகம் கட்ட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாதுகாப்பு பெட்டகம் கட்ட ஏற்படும் செலவு குறித்து சுப்ரீம்கோர்ட்டுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு பெட்டகம் கட்ட ஏற்படும் செலவை கோயில் நிர்வாகமும் மாநில அரசும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் சுப்ரீம்கோர்ட்டு கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: