முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி: ஐகோர்ட்டு நோட்டீஸ்

வெள்ளிக்கிழமை, 24 பெப்ரவரி 2012      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,பிப்.24  - கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறிய வழக்கில் மத்திய அரசு, அமலாக்கப்பிரிவுக்கு டெல்லி ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் ஷாகித்உஸ்மான் பல்வாயின் ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. ஸ்வான் நிறுவனம் சில துணை நிறுவனங்கள் மூலம் இந்த பணத்தை கைமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த பணப்பரிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து பணத்தை கைமாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குவதற்கு அமலாக்கப்பிரிவு உத்தரவிட்டது. 

இதில் ஷாகித் பல்வாவுடன் தொடர்புடைய நிகார் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் ரூ.1.10 கோடி மதிப்பிலான சொத்துக்களும் அடங்கும். அந்த நிறுவனம் அமாக்கப்பிரிவு உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. எங்கள் சொத்துக்களை முடக்க அமலாக்கப்பிரிவு பிறப்பித்த உத்தரவுகள் சட்ட விரோதமானவை என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது. 

இந்த மனு நீதிபதி எம்.எல்.மேத்தா முன்னிலையில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் அமலாக்கப்பிரிவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வரும் 27 -ம் தேதிக்கு தள்ளிவைத்தார். 

நிகார் கன்ஸ்ட்ராக்ஷன் தவிர டைனமிக்ஸ் ரியால்டி ரூ134கோடி, கான்வுட் கன்ஸ்ட்ரக்ஷன் ரூ.22 கோடி, டி.பி.ரியால்டி ரூ.52கோடி, எவர்ஸ் மைஸ் கன்ஸ்ட்ரக்ஷன் ரூ.13 கோடி ஆகிய நிறுவனங்களின் சொத்துக்களை முடக்குவதற்கும் அமலாக்கப்பிரிவு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!